சச்சின், தோனியை அருகில் உட்கார வைத்த திறமையான வேலைக்காரர் பாஸ்கரன்..! யார் இவர்..?

சச்சின், தோனியை அருகில் உட்கார வைத்த திறமையான வேலைக்காரர் பாஸ்கரன்..! யார் இவர்..?
பாஸ்கரன்
  • Share this:
சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் உள்ளூர் வீரர்கள் முதல் சர்வதேச வீரர்கள் வரை பாஸ்கரன் என்பவர் பரிட்சயம். சச்சின், தோனி போன்ற ஜாம்பவான்களுக்கும் இவரின் உதவியை நாடியுள்ளனர். அப்படி என்ன தான் பாஸ்கரனிடம் ஸ்பெஷல் வாங்க பார்க்கலாம்.

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பழைய பேட், க்ளாவ்ஸ் என பல்வேறு கிரிக்கெட் உபகரணங்களுடன் கையில் ஊசி வைத்திருக்கும் 60 வயது நிரம்பியவர் தான் பாஸ்கரன். 1993 முதல்,  27 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வரும் வீரர்களின்  கிழிந்த ஷூவ், குளோவ் போன்றவற்றை நுணுக்கமான வேலைப்பாடுகள் மூலம் சரிசெய்து கொடுப்பது தான் பாஸ்கரின் ஸ்பெஷல். இவரது திறமையை பாராட்டி 1993ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், அதிகாரப்பூர்வ 'காப்ளர்' (ஷூ, காலணிகளை சரி செய்பவர்) என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நியமித்தது.


ஆரம்பத்தில் போட்டி நாட்களின் போது 100 ரூபாயாக இருந்த இவரது ஒரு நாள் சம்பளம் இன்று ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தனது தனித்துவமான வேலைப்பாடுகள் மூலம் சச்சின், தோனி போன்றவர்கள் இவருக்கு அருகில் உட்கார்ந்து தங்களுக்கான உதவியை கேட்டுப்பெறுவர். இது தான் இந்த தொழிலுக்குக்கும் எனக்கும் கிடைத்த கவுரவம் என கூறுகிறார் பாஸ்கரன்.

Also Read : தோனியின் 'சூப்பர் பாடி கார்ட்'... யார் இந்த லேடி? இணையத்தில் வைரலாகும் வீடியோ 

கோடிகளில் சம்பாதிக்கும் சர்வதேச வீரர்கள் தங்களுக்கான ஷூ உள்ளிட்ட உபகரணங்கள் சேதமானால், புதிதாக மாற்றிக்கொள்ள மாட்டார்களா? என்ற கேள்வி எழாமல் இல்லை. அதற்கு,  ஒவ்வொரு வீரனும் தனக்கென பிடித்த உபகரணங்களுடன்தான் களம்காணுவர் எனவும் அதனை அவ்வளவு எளிதில் மாற்றிவிடமாட்டார்கள் என்றும் பாஸ்கரன் கூறுகிறார்.சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல், சர்வதேச போட்டிகளின் போது யாரும் நெருங்க முடியாத வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமிலும் எளிதாகச் சென்று வருபவர் இந்த 'காப்ளர்' பாஸ்கரன். சேப்பாக்கத்தில் தடம் பதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றிக்கு இவரும் காரணம் என்றால் அது மிகையல்ல.
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்