முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவை, இரண்டாம் டெஸ்டில் நீக்கியது சரியான முடிவுதான் என்று இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதல் டெஸ்டில் 188 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
முதல் டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி ஒட்டுமொத்தமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கிலும் அசத்திய குல்தீப், முதல் இன்னிங்சில் 40 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு, அருமையான பார்ட்னர்ஷிப்பையும் ஏற்படுத்தித் தந்தார்.
அந்தவகையில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் அறிவிக்கப்பட்டார். ஆனால் இரண்டாவது போட்டியில் விளையாட அவருக்கு கேப்டன் கே.எல். ராகுல் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2022 – ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்கள்… ஐ.பி.எல்-க்கு முதலிடம்
அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனாட்கட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், குல்தீப் பதவி நீக்கம் குறித்து கேப்டன் கே.எல்.ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் கூறியதாவது-
2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் சம பலம் கொண்ட அணியாக களத்தில் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், அணியை தேர்வு செய்தோம். இந்த மைதானம் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
‘விக்கெட்டுகள் உடனுக்குடன் விழுந்ததால் பதற்றத்தில் இருந்தோம்’ – இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்
அதனால்தான் சமபலம் வாய்ந்த அணியை நாங்கள் தேர்வு செய்வோம். அந்த வகையில்தான் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. இது மிக கடினமான ஒரு முடிவாகும். இருப்பினும் இந்த மைதானத்திற்கு குல்தீப் யாதவ் இடம்பெறாத அணி மற்றும் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் கொண்ட அணி தான் சிறப்பாக இருக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆட்டத்தில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வீரர் குல்தீப் யாதவ் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
டெஸ்ட் போட்டியில் 22 மாதங்களுக்கு பிறகு குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை சிறப்பாக பயன்படுத்தி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket