பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர்!

#LokSabhaElections2019: #GautamGambhir Joins #BJP | கடந்த மக்களவை தேர்தலில் அமித்சரசில் பாஜகவின் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக கம்பீர் பிரசாரம் மேற்கொண்டார்.

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர்!
கம்பீர்
  • News18
  • Last Updated: March 22, 2019, 3:04 PM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

தேர்தல் நேரம் என்றாலே பிரபலங்கள் கட்சியில் இணைவது, கட்சித் தாவல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என பல்வேறு காட்சிகளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் மக்களவையில் தனது பெரும்பான்மையை நிலநாட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.


இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், டெல்லி உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தார்.பின்னர், அக்கட்சியில் அகில இந்திய தலைவர் அமித் ஷாவிடம் ஆசி பெற்றார்.கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது. ஆனால் இந்த முறை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி இருக்கும் என்பதால் அவ்வளவு எளிதான செயல் அல்ல என தெரிகிறது. அதனால், பிரபலங்களை நிறுத்தினால் சமாளிக்க முடியும் என்ற யுக்தியை பாஜக எடுத்துள்ளது.

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை களமிறக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமித்சரசில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பமாட்டோம் - பாகிஸ்தான் அமைச்சர்

உலக அளவில் டிரெண்டான #MSDhoniRoars.. ட்விட்டரை அதிர வைத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

Also Watch...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading