Home /News /sports /

‘டி20 உலகக்கோப்பை அணியில் புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் தேவையில்லை'

‘டி20 உலகக்கோப்பை அணியில் புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் தேவையில்லை'

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடர்பான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சரிசெய்ய விரும்பும் இரண்டு முக்கிய குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.

    முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடர்பான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சரிசெய்ய விரும்பும் இரண்டு முக்கிய குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.

    டி20 தொடரில் இலங்கையை 3-0 என தோற்கடித்து, சொந்த மண்ணில் இந்தியாவின் மூன்றாவது ஒயிட்வாஷ் வெற்றிக்குப் பிறகு ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது யூடியூப் சேனலில் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், இந்தியாவின் பந்துவீச்சு ஆழத்தை, குறிப்பாக வேகப் பிரிவில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் இளம் வீரர் தீபக் சாஹர் ஆகியோரை உலகக் கோப்பை அணிக்காக விளையாடும் அணியில் வைப்பது கடினமாக இருக்கும் என்றார்.

    இது தொடர்பாக பிராட் ஹாக் கூறும்போது, "டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சின் ஆழம் விதிவிலக்கானதாக உள்ளது. நான் இந்தியாவுக்கான டி20 உலகக் கோப்பைக்கு ஒரு அணியைத் தேர்வு செய்கிறேன் என்றால், சிராஜ், அவேஷ் கான், மற்றும் ஹர்ஷல் படேல் போன்றோருடன் புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரை சேர்க்க மாட்டேன்.

    "இந்திய அணியில் சிறந்த ஸ்பின் பவுலிங்கும் இருக்கிறது. டாப் 2 க்குப் பிறகு அவர்களின் பேட்டர்கள் இப்போதுதான் வெடித்துக் கிளம்பத் தொடங்கியுள்ளனர். ஸ்ரேயஸ் அய்யர் என்னமா ஆடுகிறார்? ஐபிஎல் ஏலத்தில் சிறந்த தேர்வாக இருக்கிறார்.

    ரோஹித் ஷர்மா டெத் பந்துவீச்சு மற்றும் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சுழலில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா, மிகச் சிறந்த தரமான பந்துவீச்சாளர்கள், ஆனால் அழுத்தத்தின் கீழ், எதிரணி வீரர்கள் இவர்களை அடித்து நொறுக்குவார்கள்.

    குல்தீப்பை இலங்கை வீரர்கள் ஸ்வீப் செய்தபோது, ​​​​அதை எதிர்கொள்ள அவரிடம் மாற்றுப் பந்துகள் இல்லை. பந்துகள் திரும்பாத போது ​​ஜடேஜா சில சமயங்களில் கொஞ்சம் வேகமாக பந்து வீசுகிறார், இதனால் அவரை நேராக விளாச முடியும். இந்த 2-ஐயும் சரி செய்து விட்டால் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினமாக இருக்கும்.” என்றார் பிராட் ஹாக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: ICC world cup, India captain Rohit Sharma

    அடுத்த செய்தி