Home /News /sports /

விராட் கோலியை அணியை விட்டு நீக்கினாலும் பலன் ஏற்பட்டு விடாது - நெஹ்ரா நச்!

விராட் கோலியை அணியை விட்டு நீக்கினாலும் பலன் ஏற்பட்டு விடாது - நெஹ்ரா நச்!

ஆஷிஷ் நெஹ்ரா

ஆஷிஷ் நெஹ்ரா

விராட் கோலி பார்முக்கு வருவதுதான் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதே தவிர அவரை அணியிலிருந்து நீக்கி விட்டதால் மட்டும் பெரிய பலன் ஏற்பட்டு விடும் என்று சொல்வதற்கில்லை என்று முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    ஆஷிஷ் நெஹ்ரா என்றாலே 2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பவுலிங் போட்டாரே பார்க்கலாம் அன்று பும்ராவிடம் வீழ்ந்தார்களே இங்கிலாந்து அதற்குச் சற்றும் குறைவல்ல. அது, 144 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து, அது ஒரு பெரிய பவுலிங், அதன் பிறகு இப்போது ஓவலில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வீச் 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தாரே அதுதான் ஆகச்சிறந்த பந்து வீச்சு.

    இந்நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா, விராட் கோலி குறித்து கூறுகையில், “பார்மில் இல்லாத வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஒருவர் தொடர்ந்து சரியாக ஆடவில்லை என்றால் அவர் யாராக இருந்தாலும், பெரிய ஆளாக இருந்தாலும் விமர்ச்சிக்கப்படுவார் என்பது எனக்கு தெரியும்.

    அதுவே இப்போது விராட் கோலியின் விவகாரத்திலும் நடக்கிறது. ஆனால் விராட் கோலி இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார், அதிகமான ரன்கள் குவித்துள்ளார். எனவே அவரை, அவரது தற்போதைய பார்மை அடிப்படையாக வைத்து கொண்டு உடனடியாக அணியில் இருந்து நீக்கிவிட முடியாது.

    நீக்கவும் கூடாது. தனது பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை என்பது விராட் கோலிக்கும் தெரியும். ஆனால் என்னை பொறுத்தவரையில் ஒருவரை அணியில் இருந்து நீக்குவதால் எந்த பலனும் ஏற்பட்டுவிடாது”என்று தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Virat Kohli

    அடுத்த செய்தி