கிரிக்கெட் பண்டிதர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட் கீப்பிங் மீது கடுமை காட்டுகிறார்கள் ஆனால் தோனியே ஆரம்ப காலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட் கீப்பிங்கில் சோபிக்கவில்லை என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சாபா கரீம் ரிஷப் பந்த்திற்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியா தொடரில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினாலும் பேட்டிங்கி அதற்கு ஈடுகட்டு ஆஸ்திரேலியாவை ஓட ஓட விரட்டி வரலாற்று வெற்றி பெறச் செய்தார் ரிஷப் பந்த்.
சஹாவே கூட ரிஷப் பந்த் பேட்டிங்கை நான் ஏன் பார்க்க வேண்டும் என்று ஒருமுறை எரிச்சலுடன் கேட்டார். இப்படி சிலர் பந்த்திற்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.
இது தொடர்பாக ஆங்கில விளையாட்டு இணையதளம் ஒன்றில் சாபா கரீம் கூறியதாவது:
நாம் சில வேளைகளில் ரிஷப் பந்த் கீப்பிங்கை குறைகூறுவதில் ஆவேசமாக திகழ்கிறோம். நம்பிக்கை வளர வளர கீப்பிங் திறமையும் வளரும், பேட்டிங் முன்னேற்றமடையும் போது தன்னம்பிக்கை ஏற்பட்டு கீப்பிங்கும் முன்னேறும்.
நான் எம்.எஸ். தோனியின் ஆரம்ப கால கீப்பிங்கைப் பற்றி பேச விரும்புகிறேன். தொடக்கத்தில் இந்திய அணிக்கு அவர் ஆடிய போது அவரது கீப்பிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.
அவரது பேட்டிங் மூலம்தான் அவரது கீப்பிங் திறமைகளும் வளர்ந்தது.
தன் பேட்டிங் மூலம் அணியில் தன் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொண்ட தோனி பிறகு கீப்பிங்கிலும் தான் முன்னேற வேண்டும் என்று முன்னேறி சாதனை படைத்தார்.
பேட்டிங்கும் கீப்பிங்கும் ஒன்றையொன்று வளர்த்தெடுக்கக் கூடியவை. இதையே நாம் ரிஷப் பந்த்திடம் விரைவில் எதிர்பார்க்கலாம். பந்த் கீப்பிங் முன்னேற கால அவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் சபா கரீம்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.