HOME»NEWS»SPORTS»cricket even india s most one eyed fans would not have predicted a comeback michael vaughan mut

இந்தியாவின் ‘ஒற்றைப் பார்வை’ ரசிகர்கள் கூட அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு தொடரை வெல்லும் என்று கருதியிருக்க மாட்டார்கள்: மைக்கேல் வான்

அடிலெய்ட் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றதையடுத்து ஆஸ்திரேலியாவிடம் ஒயிட்வாஷ் ஆகும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியிருந்தார்.

இந்தியாவின் ‘ஒற்றைப் பார்வை’ ரசிகர்கள் கூட அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு தொடரை வெல்லும் என்று கருதியிருக்க மாட்டார்கள்: மைக்கேல் வான்
இந்திய ரசிகர்கள்.
  • Share this:

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அடிலெய்ட் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றதையடுத்து ஆஸ்திரேலியாவிடம் ஒயிட்வாஷ் ஆகும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியிருந்தார்.

ஆனால் அதன் பிறகு ரஹானே தலைமை இந்தியப் படை ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி காட்டி தொடரை 2-1 என்று இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது இதனையடுத்து ‘இந்திய அணியினர் என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்’ என்று கூறி மன்னிப்பு தொனியில் கூறியுள்ளார்.

மேலும் அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு எப்போதும் இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கும் ஒற்றைப்பார்வை கொண்ட இந்திய ரசிகர்களும் கூட இந்திய அணி தொடரை வெல்லும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் மைக்கேல் வான்.



பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இந்தியா நேற்று 329/7 என்று வெற்றி பெற்றது. ஸ்டைலிஷ் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி 91 ரன்களை எடுக்க தன் இன்னிங்ஸை அருமையாகக் கட்டமைத்து கடைசி ஒரு மணி நேரத்தில் வெளுத்து வாங்கிய ரிஷப் பந்த் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, உறுதுணை இன்னிங்ஸ் ஆடிய புஜாரா 56 ரன்களை எடுத்தார். ஆட்ட நாயகன் ரிஷப் பந்த். தொடர் நாயகன் கமின்ஸ்.

இந்நிலையில் இந்திய வெற்றியைப் பற்றி மைக்கேல் வான் கூறியதாவது:

அடிலெய்ட் தோல்விக்குப் பிறகே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0 என்று வெல்லும் என்று கூறினேன். அணித்தேர்வுச் சிக்கல்கள், காயங்கள் ஆகியவற்றினால் இந்தியாவின் ஒற்றைப்பார்வை ரசிகர்கள் கூட நம்பியிருக்க மாட்டார்கள், இந்திய அணி தொடரை வெல்லும் என்று. ஆனால் இந்திய அணி என் முகத்தில் கரியைப் பூசி விட்டனர்.

ஆனால் இவ்வளவு பிரமாதமாக ஆடிய ஷுப்மன் கில், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகியோரது நல்திறனைப் பார்க்கும் போது என் கணிப்பு தவறானது நல்லதுதான் என்று தோன்றுகிறது.

ரஹானே தலைமை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்த இந்த அடி, அடுத்த ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் தலைமை இங்கிலாந்துக்கு நல்ல தெம்பைக் கொடுத்துள்ளது.

ஆஸி. அணியின் பலவீனங்களை இந்தியா அம்பலப்படுத்தி விட்டது, இதை ஜோ ரூட் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்பலாம். இதற்கு முன்னால் ஆஸ்திரேலிய அணியிடம் இவ்வளவு பலவீனங்கள் இருப்பது தெரியாமல் போனது.

2011-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து தொடரை வெல்ல நிச்சயம் இந்தியாவைப் பார்த்து உத்வேகம் பெற்றிருக்கும். இதை விட இங்கிலாந்து அணி இந்தியாவில் விளையாடவிருக்கிறது, அது இங்கிலாந்துக்கு என்ன கஷ்டங்களைக் கொடுக்கப் போகிறதோ என்பதே என் கவலையாக உள்ளது.

இவ்வாறு கூறினார் மைக்கேல் வான்.
Published by:Muthukumar
First published: