• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உ.கோப்பை: பிரித்வி ஷா, இஷான் கிஷனுக்காக மூத்த வீரர்களை நீக்கினாலும் சரிதான்: ஹர்பஜன் சிங் பளிச்

டி20 உ.கோப்பை: பிரித்வி ஷா, இஷான் கிஷனுக்காக மூத்த வீரர்களை நீக்கினாலும் சரிதான்: ஹர்பஜன் சிங் பளிச்

ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்.

  • Share this:
    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பிரமாதமாக ஆடிய பிரித்வி ஷா, இஷான் கிஷன் இல்லாத உலகக்கோப்பை டி20 அணியை நாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை, இவர்களுக்காக மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை இவர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரிதிவி ஷா தன் இஷ்டத்துக்கு பவுண்டரிகளாக அடித்து நொறுக்க, இஷான் கிஷன் தன் அறிமுகப் போட்டியின் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பினார், அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார், இத்தகைய அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டம் பலரையும் கவர்ந்துள்ளது.

    dhawan-ishan kishan


    எனவே எமிரேட்ட்சில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற்றேயாக வேண்டுமென்கிறார் ஹர்பஜன் சிங்.

    Related: ஐபிஎல்-ல் பல ஜாம்பவான்களையே சாத்தியுள்ளனர், இந்த இலங்கை பவுலிங் எம்மாத்திரம்? : பிரிதிவி ஷா, இஷான் கிஷன் அதிரடி குறித்து முரளிதரன்

    “வீரர்களின் ஆட்டத்தை வைத்தே அவர்கள் மதிப்பிடப் படவேண்டும். ஒரு சர்வதேச போட்டியில் இவர்கள் இருவரும் ஆடிய விதம் அவர்களை டி20 உலகக்கோப்பையில் எப்படி புறக்கணிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

    டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமா? இத்தகைய வீரர்கள் அணியிலிருப்பது அவசியம். இவர்கள் எதிரணியில் யார் வீசுகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தங்களுக்கு வரும் இயல்பான அதிரடியை ஆடுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர்களுக்காக மூத்த வீரர்களை நீக்க வேண்டி வந்தாலும் தேர்வாளர்கள் பயப்படக் கூடாது. அவர்கள் இந்த வீரர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும், ஏன் சூர்யகுமார் யாதவ்வும் தன் இடத்தை டி20 உலகக்கோப்பையில் ஸ்திரப்படுத்தியுள்ளார். அட்டாக், பாதுகாப்பு ஆட்டம் இரண்டுமே சூரியாவுக்கு வருகிறது” இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

    ஹர்பஜன் கூறுவது மிக்க சரி, டி20 கிரிக்கெட் இளையோருக்கான கிரிக்கெட் இதிலும் விராட் கோலி, ரோகித் சர்மா என்று சொதப்பினாலும் மூத்த வீரர்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் பிறகு நன்றாக ஆடியும் வாய்ப்புக் கிடைக்காத இளம் வீரர்கள் மனமுடைந்து போவார்கள் என்பதை அணித்தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: