ஓய்வு பெறுகிறார் இயான் மோர்கன்: அதிர்ச்சி முடிவின் பின்னணி
ஓய்வு பெறுகிறார் இயான் மோர்கன்: அதிர்ச்சி முடிவின் பின்னணி
இயான் மோர்கன்
இங்கிலாந்து கிரிக்கெட்டின் குறைந்த ஓவர்கள் அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாகவும் இந்த வாரத்தில் இது குறித்த முடிவை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் குறைந்த ஓவர்கள் அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாகவும் இந்த வாரத்தில் இது குறித்த முடிவை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி புக் கிரிக்கெட்டில் கூட அடிக்க முடியாத ஸ்கோரையெல்லாம் எட்டினாலும் இயான் மோர்கன் 2 டக்குகளை அடுத்தடுத்து அடித்தார், இதனையடுத்து இவர் மீதான ரசிகர்கள் மற்றும் முன்னாள்களின் விமர்சனங்கள் எழுந்தன.
3வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக உட்கார்ந்தார். இங்கிலாந்து 3-0 என்று வெற்றி பெற்றது. இவரது பேட்டிங் தடுமாற்றமாக இருப்பதோடு, உடல் நிலையும் காயங்களுடனேயே இருந்து வருகிறது.
2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணி இழிவான தோல்விகளை இவர் தலைமையில் சந்தித்தது, ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து அணியை நம்பர் 1 ஒருநாள், டி20 அணியாக மாற்றினார். ஆக்ரோஷமாக அணியாக மாற்றினார், ஏகப்பட்ட இருதரப்பு தொடர்களை வென்றார்.
அப்படியே அணியை மேம்படுத்தி இங்கிலாந்தை உலகக்கோப்பையை முதல் முறையாக வெல்லச் செய்த கேப்டனுமானார் மோர்கன்.
அவர் ஏற்கெனவே, “அணிக்கு என் பங்களிப்பு இல்லாத போது நான் முடிந்து விட்டேன் என்று அர்த்தம்” என்றார். ஆனால் இங்கிலாந்து அணி வீரர்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக ஜாஸ் பட்லர் கேப்டனாக்கப்படலாம் என்று தெரிகிறது. 248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும் 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதம், டி20-யில் 14 அரைசதம் அடித்துள்ளார்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.