நியூசிலாந்து அணிக்கு எதிரான போடியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.
நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடர் லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜேசன் ராய், ஜானி பயர்ஸ்டோ சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ராய் 60 ரன்களுக்கும், ஜானி பயர்ஸ்டோ 106 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்தது.
306 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 5-வது பந்திலேயே ஹென்ரி நிகோல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழக்க டாம் லாதம் மட்டும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். 57 ரன்கள் எடுத்திருந்த போது பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் 44.5-ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி தோற்றது.
நியூசிலாந்து அணியை வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி 12 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
England book their place in the semi-finals!
Jonny Bairstow's century was the highlight of the England innings before the bowlers took over to help seal a 119-run win. #ENGvNZ | #CWC19pic.twitter.com/6wE2xVvq0W
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.