ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் அடித்த இங்கிலாந்து… 3ஆவது டெஸ்டிலும் வெற்றி…

பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் அடித்த இங்கிலாந்து… 3ஆவது டெஸ்டிலும் வெற்றி…

வெற்றிக்கு பின்னர் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட இங்கிலாந்து அணி

வெற்றிக்கு பின்னர் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட இங்கிலாந்து அணி

பாகிஸ்தான் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்திருப்பதை அந்நாட்டு ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 7 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இதன்பின்னர் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்தன. முதல் மற்றும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

மெஸ்ஸி இந்தியாவில் பிறந்து இருந்தால் உலகக் கோப்பை வென்ற பின் இதான் நடந்திருக்கும் - சேவாக்

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்களையும், இங்கிலாந்து அணி 354 ரன்களையும் எடுத்திருந்தது. இதையடுத்து நடந்த இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் இளம் பந்து வீச்சாளர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி விளையாட தொடங்கியது. நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 4ஆம் நாள் ஆட்டத்தின்போது, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து170 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்றது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும், தொடக்க வீரர் பென் டக்கட் 82 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பிசிசிஐ உயர்மட்ட கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது… இந்திய அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை…

கராச்சி டெஸ்ட் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒயிட் வாஷ் அடித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

2005ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்போதுதான் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில் பாதுகாப்பு காரணமாக இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.

சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்திருப்பதை அந்நாட்டு ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

First published:

Tags: Cricket, England