• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி

India vs England

India vs England

இந்திய அணி 278 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

  • Share this:
    இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையானது.

    லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி நிதானமாக விளையாடி வந்தது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 215 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 139 ரன்கள் பின்தங்கி இருந்தனர். புஜாரா 91 மற்றும் விராட் கோலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் போட்டி இந்தியா பக்கம் திரும்பவும் வாய்ப்பு இருந்தது.

    ஆனால் 4-வது நாளான இன்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் முழுவதுமாக போட்டி சென்றது. ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே புஜாரா 91 ரன்னிலும் விராட் கோலி 55 ரன்னிலும் ராபின்சன் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

    அடுத்துவந்த ராஹனே (10), ரிஷப் பந்த் (1), ரவிந்திர ஜடேஜா (30) என அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இறுதியாக இந்திய அணி 278 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 5 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.



    இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி ஓவல் மைாதனத்தில் தொடங்க உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: