Home /News /sports /

முதல் டி20யில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இங்கிலாந்து!..

முதல் டி20யில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இங்கிலாந்து!..

பாபர் அசாம், மொலின் அலி

பாபர் அசாம், மொலின் அலி

Karachi : கராச்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கராச்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

மட்டைப்பிட்சில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைக்க அந்த அணியில் முகமது ரிஸ்வான் தன் அற்புதமான பார்மைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் அவர், 46 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 68 ரன்களை அதிகபட்சமாக எடுக்க, மற்றவர்கள் சொதப்ப பாகிஸ்தான் 158/7 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் மீண்டும் அணிக்குத் திரும்பிய அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க ஹாரி புரூக், 25 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுக்க 19.2 ஓவர்களில் 160/4 என்று அபார வெற்றி பெற்று 7 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

பட்லர் இல்லாததால் மொயீன் அலி கேப்டனாக செயல்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3 பவுண்டரிகளில் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்துத் தொடங்கினார். மொயீன் அலி, ஆதில் ரஷீத் பந்து வீச வந்தும் பாகிஸ்தான் ஸ்கோரிங் நல்ல நிலையில்தான் இருந்தது, ரிஸ்வான் தன் முதல் சிக்ஸ் மூலம் அரைசதம் எட்டினார். ஆனால் பாபர் அசாம் 31 ரன்களில் ஆதில் ரஷீதின் அபார கூக்ளியில் பவுல்டு ஆனார்.

இதையும் படிங்க : மூன்று கேட்ச்கள் ட்ராப்: புவனேஷ்வர், ஹர்ஷல் படேல் 8 ஓவர் 101 ரன்கள்- ‘ஹைப்’ இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்த ஆஸி.

அங்கிருந்து ரன் ரேட் குறையத் தொடங்கியது. காரணம் இங்கிலாந்து பவுலர்கள் ரெகுலராக விக்கெட்டுகளை எடுத்தனர். பாபர் அசாம் போனவுடன் ஹைதர் அலி (11) வெளியேறினார், ரிஸ்வானை மொயின் அலி வீழ்த்தினார். லூக் உட் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 109/1லிருந்து பாகிஸ்தான் முகமது நவாஸ் விக்கெட்டுடன் 137/5 என்று ஆனது. கடைசியில் 158/7 என்று முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் லூக் உட் 3 விக்கெட்டுகளையும் ரஷீத் 2 விக்கெட்டுகளையும் மொயின் அலி, சாம்கரன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Image
வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற இங்கிலாந்து வீரர்கள்


பேட்டிங் பிட்சில் எளிய இலக்கை எதிர்கண்ட இங்கிலாந்து அணி பில் சால்ட் (10) விக்கெட்டை இழந்தது. டேவிட் மலான் (20), பென் டக்கெட் (21), அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர் சுழலில் சிக்கி வெளியேறினர்.  ஹேல்ஸ் (53), ஹாரி புரூக் (47) இருவரும் சேர்ந்து ஸ்கோரை 142 ரன்களுக்கு உயர்த்திய போது ஹேல்ஸை ராவுஃப் வீழ்த்தினார்.  ஆனால் பயனில்லை, கடைசியில் மொயீன் அலி 7 நாட் அவுட், புரூக் 47 நாட் அவுட் இலக்கை கடந்தனர். 160/4, இங்கிலாந்து வெற்றி. ஆட்ட நாயகன் லூக் உட்.
Published by:Arunkumar A
First published:

Tags: England, Karachi, Pakistan cricket

அடுத்த செய்தி