ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சாம் கரன் அபாரம்: சொற்ப இலக்கை அடைய இங்கிலாந்தை திணற வைத்த ஆப்கானிஸ்தான்

சாம் கரன் அபாரம்: சொற்ப இலக்கை அடைய இங்கிலாந்தை திணற வைத்த ஆப்கானிஸ்தான்

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

டி20 உலககோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்  இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. பெர்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணியில் இப்ரகிம் ஜடார்ன் 32 ரன்களும், உஸ்மான் ககானி 30 ரன்கள் எடுத்ததே அதிகபட்டச ரன்களாகும்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசியாக ஆல்ரவுண்டர் சாம் கரன் 5 விக்கெட்டை வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

    Also Read: டி20 உலகக்கோப்பை : சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவவை வீழ்த்திய நியூசிலாந்து

    113 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பட்லர் 18 ரன்களும் மற்றும் அலக்ஸ் கெல்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்து வெளியேறினார். அடுத்து வந்த மலான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துக்களில் 18 ரன்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 113 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Afghanistan, England, T20 World Cup