முகப்பு /செய்தி /விளையாட்டு / அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி… உலகக்கோப்பை தொடரில் சாதனை படைத்த இங்கிலாந்து அணி

அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி… உலகக்கோப்பை தொடரில் சாதனை படைத்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி.

முன்னதாக 2020-இல் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 114 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து ஏற்படுத்தியுள்ளது. உலகக்கேப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து, வியாட் மற்றும் டங்ளே ஆகியோர் களத்தில் இறங்கினர். டங்களே 2 ரன்னிலும், அடுத்து வந்த ஆலிஸ் கேப்சி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து தொடக்க வீராங்கனை வியாட்டுடன் நேட் சிவர் ப்ரூன்ட் இணைந்து அதிரடியாக விளையாடினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் சேர்த்தனர். 33 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 59 ரன்கள் எடுத்தார். நேட் சிவர் ப்ரூன்ட் 40 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் தன் பங்கிற்கு 47 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது. இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணியின் வீராங்கனைகள் விளையாடத் தொடங்கினர்.

தொடக்க வீராங்கனைகள் சதாப் சமாஸ் ரன் ஏதும் எடுக்காமலும், முனீபா அலி 3 ரன்னிலும் வெளியேற, அடுத்து வந்த ஒமைமா சொஹைல் 9 ரன்கள் எடுததார். அடுத்து விளையாடிய சித்ராஅமீன் 12 ரன்னும், கேப்டன நிதா தார் 11 ரன்னும் எடுத்து ஏமாற்றம்அளித்தனர். 54 ரன்னுக்கு பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் பாத்திமா சனா – துபா ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. இருவரும் 8ஆவது விக்கெட்டிற்கு 37 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 114 ரன் என்ற மிக அதிகமான ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2020-இல் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன்பாக நியூசிலாந்து இலங்கையை 102 ரன் வித்தியாசத்திலும், தாய்லாந்தை இங்கிலாந்து 98 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை ஆஸ்திரேலியா 97 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தன.

First published:

Tags: Cricket