முகப்பு /செய்தி /விளையாட்டு / பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது!

பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது!

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இழக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.  டம்மி பியூமண்ட் மற்றும் டேனி வியாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடினர்.  டம்மி  பியூமண்ட் 11 ரன்கள் எடுத்து வெளியாறிய நிலையில், நாட் ஸ்கைவர்- டேனி வியாட் இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை அந்நாட்டு அணி வெற்றிகொண்டது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடியது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது போட்டியில் இந்திய அணியும் பெற்றன. இந்த நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது ஆட்டம் இங்கிலாந்தின் செம்ஸ்ஃபோர்டு மைதானத்தில் நடந்தது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு நடுவராக முதன்முறையாக இந்தியர் தேர்வு!

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலாவதாக பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வர்மா களமிறங்கினர்.ஸ்மிரிதி மந்தனாவை தவிர ஏனையோர் சொற்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மிரிதி மந்தனா 72 ரன்கள் குவித்தார். இறுதியில், 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணை 153 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க: வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்: பி.வி. சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி!

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இழக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.  டம்மி பியூமண்ட் மற்றும் டேனி வியாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடினர்.  டம்மி  பியூமண்ட் 11 ரன்கள் எடுத்து வெளியாறிய நிலையில், நாட் ஸ்கைவர்- டேனி வியாட் இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில், 8 பந்துகள் மீதமிருக்கையில் 154 ரன்களை எடுத்து இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து டி20 தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

First published:

Tags: Cricket, India Vs England, Indian women cricket