இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து, இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, ஸ்மிரிதி மந்தனா 66 ரன்களும், பூனம் ரவுத் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், கடைசி கட்டத்தில் வீராங்கனைகளின் பொறுப்பான ஆட்டத்தால் 48.5 ஓவர்கள் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டேனியல் வையட் 56 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். கடைசிப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
CHAMPIONS 🎉🎉#TeamIndia Women clinch the ODI series against England Women 2-1#INDWvENGW pic.twitter.com/P0zYqgzj22
— BCCI Women (@BCCIWomen) February 28, 2019
இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது.
அபிநந்தனுக்கு சதத்தை சமர்பித்த விருத்திமான் சஹா!
மறக்க முடியாத தோல்வி... முதல் முறையாக தொடரை இழந்த கேப்டன் கோலி!
இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐசிசி சூசகம்!
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian cricket team, Mithali Raj