Eng vs Pak| டி20: பாகிஸ்தானை கதற விட்ட இங்கிலாந்து- தொடரை வென்றது

டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

மான்செஸ்டர் ஓல்ட் டிராபர்டில் நடைபெற்ற 3வது, கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

  • Share this:
    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வானின் 57 பந்து 76 நாட் அவுட்டினால் 154/6 என்ற ஸ்கோரை எட்டியது, ஆதில் ரஷீத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் பொளந்து கட்டினார். 36 பந்துகளில் 64 விளாசினார். ஹபீஸ் 3 விக்கெட்டுகளை விக்கெட்டுகளைக் கைப்பற்ற சரிவு ஏற்பட்டு ஆட்டம் கடைசி ஓவருக்குச் சென்றது, 20வது ஓவரில் 6ரன்கள் தேவை, மோர்கன் 19 கிரீசில் இருந்தார். லிவிங்ஸ்டன் 19வது ஓவரில் மிகப்பெரிய சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார். ஜோர்டான் இறங்கினார்.

    மோர்கன் 2 ரன்கள் எடுத்து 21 ரன்களில் ஆட்டமிழக்க 3வது, 4வது பந்துகளில் ஜோர்டான் 2 இரண்டுகளை எடுக்க இங்கிலாந்து வெற்றியை ஈட்டியது. 155/7 என்று 2 பந்துகள் மீதம் வைத்து இங்கிலாந்து தொடரை 2-1 என்று வென்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் கட்டுப்பாடுடன் கூடிய ஆக்ரோஷம் காட்டினர். ரிஸ்கைக் குறைத்து ஆடினர். ரிஸ்வான் டேவிட் வில்லேயை 3ம் ஓவரில் லாங் ஆன் மேல் மிகப்பெரிய சிக்சரை விளாசினார். பாபர் அசாம் (11) சரியாக அடித்து ஆட முடியவில்லை. இதனையடுத்து கடும் வெறுப்பில் இருந்த பாபர் அசாம், ரஷீத்தை மேலேறி வந்து மட்டையை சுழற்ற ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். 9வது ஓவரில் ரஷீத் 2 பாகிஸ்தான் வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார். சோகைப் மக்சூது 13 ரன்களில் ரஷீத் பந்தை நேராக ராய் கையில் அடித்தார்.

    ரிஸ்வான்.


    முகமது ஹபீஸ் (1), ஷார்ட் பிட்ச் பந்தை நேராக குறிபார்த்து ஸ்கொயர்லெக்கில் பேர்ஸ்டோ கையில் அடித்தார். மொயின் அலியும் சிக்கனமாக வீசினார் 19 ரன்களுக்கு 1 விக்கெட்டை அவர் கைப்பற்ற பாகிஸ்தானை மிடில் ஓவரில் நசுக்கியது இங்கிலாந்து. 4 ஓவர்களில் பவுண்டரியே கொடுக்கவில்லை. பகர் ஜமான் (24) முக்கியமான விக்க்ட்டை மொயின் அலி கைப்பற்றினார். முகமது ரிஸ்வான் தனது 8வது அரைசதத்தை 38 பந்துகளில் எடுத்தார். இவர் மட்டுமே அவ்வப்போது பவுண்டரிகள் விளாசினார், மற்றபடி மறுமுனையில் ஆதரவு இல்லை. இமாத் வாசிம் 3 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஷதாப் கான் 2 ரன்களில் ரஷீத்தின் 4வது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினார்.

    ஹசன் அலி 9 பந்துகளில் 15 ரன் என்று ரிஸ்வானுக்கு கொஞ்சம் உறுதுணையாக ஆடினார். கிறிஸ் ஜோர்டானின் கடைசி ஓவர் பிரமாதம். 5 ரன்கள்தான் வந்தது பாகிஸ்தான் 154/6 என்று முடிந்தது.

    ஜேசன் ராய் அதிரடி:

    சேசிங்கில் ஜேசன் ராய் ஷாகின் ஷா அப்ரீடியை 2வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார். ஜோஸ் பட்லருக்கு பந்துகள் மாட்டவில்லை, திணறினார். 21 ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் அதிலும் ஒரு லைஃப், 15 ரன்னில் அவருக்கு கேட்ச் விடப்பட்டது. ஸ்பின்னர்கள் பேட்ஸ்மெனுக்கு கடினமளித்தனர், ஆனால் ஜேசன் ராய் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 30 பந்தில் அரைசதம் கடந்தார். டி20-யில் 6வது அரைசதம். தொடரில் முதல் முறையாக வீச வந்த உஸ்மான் காதிர் வந்தவுடன் ஜேசன் ராய் 2 ஸ்வீப் பவுண்டரிகளை அடித்தார். பிறகு லாங் ஆஃபில் அடிக்க முயன்று 11வது ஓவரில் லாங் ஆஃபில் கேட்ச் ஆகி ராய் வெளியேறினார்.

    ஜேசன் ராய்.


    ராய் போனவுடன் பவுண்டரிகள் வறட்சியானது. பேர்ஸ்டோ (5), மொயின் அலி (1) வெளியேறினர். 15 ஒவர்களில் இங்கிலாந்து 112/4 என்று இருந்தது. மோர்கன், டேவிட் மலான் சேர்ந்து இங்கிலாந்தை 19 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். ஹசன் அலி 4 டாட் பால்களை அருமையாக வீசினார், ஆனால் மோர்கன் கடைசி 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இதில் ஒன்று சிக்ஸ். ஹபீஸ் பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8 பந்தில் 12 ரன் தேவை எனும்போது லிவிங்ஸ்டன் மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். அதன் பிறகுதான் கடைசி ஓவரில் 6 ரன்கள் என்று வர மோர்கன் ஒரு டூ எடுக்க ஜோர்டான் 2 இரண்டுகளை எடுத்து இங்கிலாந்து 2 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.

    ஆட்ட நாயகன் ஜேசன் ராய், தொடர்நாயகன் லியாம் லிவிங்ஸ்டன்.
    Published by:Muthukumar
    First published: