#WIvENG: மோசமான உலக சாதனையில் முடிந்த டெஸ்ட் போட்டி!

England, West Indies bowlers combine to create an worst record | டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இழந்தாலும், கடைசி டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது. #WIvENG

news18
Updated: February 13, 2019, 7:52 PM IST
#WIvENG: மோசமான உலக சாதனையில் முடிந்த டெஸ்ட் போட்டி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி. (WIndies Cricket)
news18
Updated: February 13, 2019, 7:52 PM IST
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மோசமான சாதனையில் முடிந்தது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விதமான போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி செயிண்ட்.லூசியா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 277 ரன்களுக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது.

England Team, இங்கிலாந்து அணி
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட். (WIndies Cricket)


2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால், 484 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இழந்தாலும், கடைசி டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது.

இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளின் பந்துவீச்சாளர்கள் மோசமான உலக சாதனையைச் செய்தனர். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக வொய்டுகள் வீசப்பட்ட போட்டி என்ற சாதனை நிகழ்த்தப்பட்டது.

England Team, இங்கிலாந்து அணி
கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி. (EnglandCricket)
Loading...
2008-ல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டியில் 34 வொய்டுகள் வீசப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது, 35 வொய்டுகள் வீசப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கையாலும் பந்துவீசி அசத்தும் இந்திய பவுலர்!

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626