முகப்பு /செய்தி /விளையாட்டு / IND vs ENG-அப்போது சொதப்பல், இப்போது அசத்தல்: இங்கிலாந்து அணி குறித்து திராவிட்

IND vs ENG-அப்போது சொதப்பல், இப்போது அசத்தல்: இங்கிலாந்து அணி குறித்து திராவிட்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

விராட் கோலி கேப்டன்சியில் இங்கிலாந்து சென்ற போது ஜோ ரூட் தலைமையில் தன்னம்பிக்கை இல்லாத சொதப்பிய இங்கிலாந்து அணியைப் பார்த்தோம் இப்போது மெக்கல்லம் பயிற்சியில், பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணியை பார்க்கிறோம், இந்த இங்கிலாந்து அணி அபாயகரமானது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விராட் கோலி கேப்டன்சியில் இங்கிலாந்து சென்ற போது ஜோ ரூட் தலைமையில் தன்னம்பிக்கை இல்லாத சொதப்பிய இங்கிலாந்து அணியைப் பார்த்தோம் இப்போது மெக்கல்லம் பயிற்சியில், பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணியை பார்க்கிறோம், இந்த இங்கிலாந்து அணி அபாயகரமானது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ராகுல் திராவிட் தலைமையில் அங்கு தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ஆனாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் கொடுக்காமல் விட்டதால் தொடரை 2-0 என்று வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது, பவுலர்கள் களைப்பை காரணமாகக் காட்டினார் அப்போதைய கேப்டன் ராகுல் திராவிட். அப்போது பவுலர்களான ஜாகீர் கான், உள்ளிட்டோர் நாங்கள் களைப்படைந்ததாக சொல்லவே இல்லை என்று மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின்  COVID தொற்று ஏற்பட்ட பின்னர் ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்தின் மீதமுள்ள ஐந்தாவது டெஸ்டில் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜூலை 1-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, அப்போது ஆடியிருந்தால் தொடரை வென்றிருக்கலாம், இப்போது கடினம். உண்மையில் அப்போது ஐபிஎல்-க்காக ஓடி வந்ததை நினைத்து இப்போது இந்திய அணி வருந்தவே செய்யும். அப்போது இந்திய அணியை வழிநடத்தியது விராட் கோலி தான், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட மோதலில் இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்துவார்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது, “டெஸ்ட் மேட்ச் எனும் போது இது உண்மையில் விறுவிறுப்பாகவே இருக்கும். நமக்கு இது ஒரேயொரு டெஸ்ட் போட்டி, ஆனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதி. 4 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்று வென்ற நிலையில் அங்கமாக இருந்த வீரர்கள் தொடரை வெல்ல கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர். எனவே இந்த டெஸ்ட்டை எதிர்நோக்குகிறோம்.

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியை விளையாடுவது எப்போதுமே அருமையாக இருக்கிறது; கூட்டம் பிரமாதமாக இருக்கும். நீங்கள் அங்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது இங்கிலாந்தில் நல்ல கூட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள். மேலும் இங்கிலாந்து தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இங்கிலாந்து பிரமாதமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள்.

கடந்த முறை இங்கு வந்த போது இங்கிலாந்து கொஞ்சம் பின்னடைவு கண்டனர், ஆனால் இப்போது புதிய தலைமையில் நியூசிலாந்துக்கு எதிராக 2 அருமையான போட்டிகளில் ஆடினர். நம்மிடமும் நல்ல அணி இருக்கிறது. நிச்சயம் இது ஒரு நல்ல போட்டியாக அமையும்.

டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடுவதும், அதைப்பார்ப்பதும் எனக்கு விருப்பமானது. பயிற்சியளிப்பதும் விருப்பமானது.” என்றார்.

First published:

Tags: India Vs England, Rahul Dravid