வலுவான நிலையில் மேற்கிந்திய தீவுகள்... சொந்த மண்ணில் இங்கிலாந்து தடுமாற்றம்

ENG vs WI

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்களை எடுத்துள்ளது.

 • Last Updated :
 • Share this:
  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்களை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை சேர்த்துள்ளது.

  கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் இடையே மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

  இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்களுடன் மேற்கிந்தியத்தீவுகள் அணி பேட்டிங்கைத் தொடர்ந்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கிராயக் பிராத்வெய்ட் 65 ரன்கள் எடுத்தார்.

  அதற்கு அடுத்தபடியாக நிலைத்து நின்ற ஷேன் டவ்ரிச் 61 ரன்கள் எடுத்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினார். ரோஸ்டன் சேஸ் 47 ரன்களில் வெளியேறினார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 318 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

  இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

  3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்த்திருந்தது. ரோரி ஜோசப் பர்ன்ஸ் 10 ரன்களுடனும், டாம் சிப்ளி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  இங்கிலாந்து அணியின்10 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத்தீவுகள் இன்று ஒரே நாளில் வீழ்த்தும்பட்சத்தில் , மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் எத்தனை பெரிய ஸ்கோரையும் எளிதில் சேஸ் செய்துவிடுவார்கள், விக்கெட் விழாத பட்சத்தில் போட்டி டிராவை நோக்கி செல்லவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

   
  Published by:Vijay R
  First published: