இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 313-க்கு ஆல் அவுட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்களே வெற்றி இலக்கு

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 313-க்கு ஆல் அவுட் ஆகியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்களே வெற்றி இலக்காக உள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 313-க்கு ஆல் அவுட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்களே வெற்றி இலக்கு
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்.
  • Share this:
கொரோனோ வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்  தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் கொரோனோ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 8ம் தேதி சௌத்தம்டனில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பிராத்வெய்ட் 65 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 114 ரன்கள் பிந்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் கேப்ரில் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இறுதியில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Also see:

ஜேக் க்ரௌலி 76 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுசேர்த்தார். பந்துவீச்சு தரப்பில் கேப்ரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒட்டுமொத்தமாக இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து கேப்ரில் 9 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.கடைசி நாளான இன்று 200 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக  கிரிக்கெட் போட்டியை முடக்கியிருந்த கொரோனோ வைரஸை வென்றதன் அடையாளமாக நடைபெறும் முதல் சர்வதேசப் போட்டி இது என்பது கூடுதல் சிறப்பாகும்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading