வெஸ்ட் இண்டீஸ் உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி.
- News18 Tamil
- Last Updated: July 28, 2020, 10:43 PM IST
கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து நான்கு மாதங்களாக முடங்கியிருந்த கிரிக்கெட்டிற்கு மீண்டும் உயிர் கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை வரவழைத்து ஒத்திவைக்கப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்தியது.
பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனில் இருந்த நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து நிதானமாக விளையாடி 369 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நான்கு வீரர்கள் அரைசதம் கடந்தனர். அதிகபட்சமாக போப் 91 ரன்கள் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் சுருண்டது 197 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டையும் பறிகொடுத்தது. பிராட் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்களான Rory Burns மற்றும் Sibley அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். Rory Burns 90 ரன்களும் Sibley 56 ரன்கள் விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.
Also read: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தைக் கடந்த 5 மாநிலங்களில் மூன்று தென் மாநிலங்கள்
தொடர்ந்து வந்த ரூட்டும் அதிரடி காட்டி 56 பந்துகளுக்கு 68 ரன்கள் சேர்த்தார். இரண்டு விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.398 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்து வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். பிராட் வோக்ஸ் கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அடித்தடுத்து வெளியேற்றினர். வோக்ஸ் 5 விக்கெட்டுகளையுக் பிராட் 4 விக்கெட்டுகளையுக் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற ஆட்டக்கணக்கில் தொடரைக் கைப்பற்றி கொரோனோ கால டெஸ்ட் கோப்பையை வசப்படுத்தியது.
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தினார். பிராட் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர்களுக்கு தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனில் இருந்த நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து நிதானமாக விளையாடி 369 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நான்கு வீரர்கள் அரைசதம் கடந்தனர். அதிகபட்சமாக போப் 91 ரன்கள் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் சுருண்டது 197 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டையும் பறிகொடுத்தது. பிராட் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.