கொரோனோ கால கிரிக்கெட்டில் அடுத்தடுத்து சதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள்

சதமடித்த வீரர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் சிப்லி சதம் விளாசி அசத்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நான்கு மாதத்திற்கு பிறகு சதம் அடிக்கும் காட்சியை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய சிப்லி நிலைத்து நின்று விளையாடி சதம் விளாசி அசத்தினார். நான்கு மாதத்திற்கு பிறகு கொரோனா காலத்தில் அடிக்கப்பட்ட முதல் சதம் என்ற சிறப்பை பெற்றுள்ளார் சிப்லி. இவரை தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
இரண்டாவது நாளில் இருவர் சதம் விளாசியதால் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. ஸ்டோக்ஸ் 170 ரன்களை கடந்துள்ளதால் இரட்டை சதத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Published by:Sankar A
First published: