ஆண்டிகுவாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரிச்சர்ட்ஸ்-போத்தம் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பேர்ஸ்டோவின் 109 ரன் இங்கிலாந்தை 48-4 இலிருந்து மீட்டு 268-6 என்று உயர்த்தியுள்ளது. ஆஷஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 113 ரன்களுக்குப் பிறகு பேர்ஸ்டோ தன் இரண்டாவது சதம் அடித்தார்; இங்கிலாந்து அறிமுக வீரர் அலெக்ஸ் லீஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜேசன் ஹோல்டர் மிகப்பிரமாதமாக வீசி 16 ஓவர் 9 மெய்டன் 15 ரன் 2 விக்கெட்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் இங்கிலாந்து அணி தடுமாறியது .இதனால் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் என்று தடுமாற்றத் தொடக்கம் கண்டது. அதன் பிறகு ஜானி பேர்ஸ்டோ தனது 8வது டெஸ்ட் சதத்தை எடுத்ததால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தை 268-6 என்று நிறைவு செய்தது.
சிட்னியில் நடந்த நான்காவது ஆஷஸ் டெஸ்டில் பேர்ஸ்டோ தனது 113 ரன்களைத் தொடர்ந்து கரீபியனில் முதல் டெஸ்ட்டில் 216 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார், 48 ரன்களில் இருந்து தனது அணியை உயர்த்தியபோது, தைரியம் நுட்பம், வேகமாக ஓடுதல் மற்றும் நுணுக்கம் ஆகியவற்றை தன் பேட்டிங்கில் காட்டினார்.
ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்சுடன் (36), 5-வது விக்கெட்டுக்காக 67 ரன்களைச் சேர்த்தார். பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் (42) உடன் சேர்ந்து 99 ரன்களைச் சேர்த்தார். பிறகு 190 பந்துகளில் தன் 8வது சதத்தை எடுத்தார், 17 பவுண்டரிகள் இதில் அடங்கும். கிறிஸ் வோக்ஸ் 24 நாட் அவுட் பேர்ஸ்டோ 109 நாட் அவுட். இருவரும் சேர்ந்து 54 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.
அறிமுக வீரர் அலெக்ஸ் லீஸ் (4) தான் எதிர்கொண்ட ஒன்பதாவது பந்தில் கெமர் ரோச்சிடம் எல்பிடபிள்யூ அவுட் ஆனார் மற்றும் ரூட் ரோச் பந்துவீச்சில் பவுல்டு ஆனார். ரூட் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு மாறி களமிறங்கினார் ஆனால் சோபிக்கவில்லை
ஜாக் கிராலி (8) இரண்டு ஓவர்களுக்குப் பிறகு வெளியேறினார் - வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வாவின் அற்புத கேட்சுக்கு கிராலி, ஜெய்டன் சீல்ஸிடம் விக்கெட்டை கொடுத்தார். ரூட் ஒன்பதாவது ஓவரில் ரோச்சின் இன் கட்டர் மூலம் ஆஃப் ஸ்டம்பை இழந்தார். ஸ்ட்ரோக் ஆடாமல் பந்தை விட்டார். இதற்கு ஒரு பந்து முன்னர்தான் ரூட்டுக்கு பிளாக்வுட் கேட்சையும் விட்டிருந்தார்.
டேன் லாரன்ஸ் அருமையாக ஆடினாலும் 20 ரன்களில் அபார ஜேசன் ஹோல்டரிடம் வெளியேறினார். அவுட் ஸ்விங்கர் எட்ஜ் ஆனது. ஹோல்டர் வரிசையாக 5 மெய்டன்களை வீசி காலையிலேயே இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு முழு-ஸ்விங்கிங் பந்து வீச்சில் ஸ்டோக்ஸை இன்சைட் எட்ஜில் ஸ்டோக்ஸை பவுல்டு செய்தார் சீல்ஸ். ரூட் இவரை தொடர் பவுண்டரிகளுக்கு அடித்ததார், ஆனால் கடைசியில் சீல்ஸ் ஸ்டோக்ஸை வீழ்த்தி வெற்றி கண்டார், வெஸ்ட் இண்டீஸ் 115/5 என்று ஆனது.
அதன் பிறகுதான் பேர்ஸ்டோ தன் சதம் மூலம் மே.இ.தீவுகளை மீட்டெடுத்துள்ளார். இங்கிலாந்து 268/6.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.