England vs West Indies | கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிதானமான ஆட்டம்..

England vs West Indies | கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

England vs West Indies | கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிதானமான ஆட்டம்..
ENGvsWI
  • Share this:
இங்கிலாந்து-மேற்கிந்தியத்தீவுகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள மைதாதனத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்தின் டாம் சிப்ளி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கேப்டன் ஜோ ரூட் 17 ரன்களில் வெளியேறினார். துவக்க வீரர் ரோரி ஜோசப் பர்ன்ஸ் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். பென்ஸ்டோக்ஸ் 20 ரன்கள் எடுத்தார். ஓளி போப் 91 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



போதிய வெளிச்சம் இல்லாததால் முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கெமர் ரோச் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading