Home /News /sports /

Eng vs WI இங்கிலாந்தின் மானம் கப்பலேறாமல் காப்பாற்றிய லீச், சாகிப்- 90/8லிருந்து 204 ஆல் அவுட்

Eng vs WI இங்கிலாந்தின் மானம் கப்பலேறாமல் காப்பாற்றிய லீச், சாகிப்- 90/8லிருந்து 204 ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் பவுலிங்

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் பவுலிங்

செயிண்ட் ஜார்ஜில் நேற்று தொடங்கிய மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து 53/6 என்று சரிந்து பிறகு 90/8 என்று ஆகி கடைசியில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்காக ஜாக் லீச் (41), சாகிப் முகமது (49) ஆகியோர் 90 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து மானம் கப்பலேறாமல் காப்பாற்றினர்.

மேலும் படிக்கவும் ...
செயிண்ட் ஜார்ஜில் நேற்று தொடங்கிய மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து 53/6 என்று சரிந்து பிறகு 90/8 என்று ஆகி கடைசியில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்காக ஜாக் லீச் (41), சாகிப் முகமது (49) ஆகியோர் 90 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து மானம் கப்பலேறாமல் காப்பாற்றினர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த போதே ரூட்டுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. பந்துகள் நன்றாக ஸ்விங் ஆக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் பிரமாதமாகப் பயன்படுத்தினர். 12 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் (31), ஜாக் கிராலி (7) கொண்டு சென்றனர். ஏகப்பட்ட பீட்டன்களுடன் தாக்குப் பிடித்தனர், கடைசியில் ஜாக் கிராலி கைல் மேயர்ஸ் பந்தை ஏந்திக்கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் ஜோ ரூட் 9 பந்துகள் ஆடி ரன் எதுவும் எடுக்காமல் மேயர்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி டக் அவுட் ஆனார்.

ஜோ ரூட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.


மேயர்ஸ் முதல் 5 ஓவர்களில் ரன்னே கொடுக்கவில்லை. இங்கிலாந்து ரன்கள் வருவது சகாராவில் மழை வருவது போல் ஆக, டேன் லாரன்ஸ் 8 ரன்களில் ஜெய்டன் சீல்ஸ் (3/40) பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் ஜோசப்பின் ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்கிறேன் என்று அவரிடமே கேட்ச் கொடுத்து சொற்பத்தில் வெளியேறினார். பிறகு லீஸ், பேர்ஸ்டோ இருவரும் சடுதியில் முறையே ரோச் மற்றும் ஜோசப்பிடம் விழ ரன்னே வரமால் 3 விக்கெட்டுகள் விழுந்தன.

விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் (7) ஸ்டம்பை பெயர்த்தார் சீல்ஸ். அதே போன்ற பந்தில் கிரெய்க் ஓவர்டனை கிமார் ரோச் ஸ்டம்பைப் பெயர்த்தார், இரண்டுமே பெரிய இன் கட்டர்கள். 90/8 என்று 100 வருமா என்று ரூட் கவலையுடன் இருந்த போது கிறிஸ் வோக்ஸ் (25), லீச் சேர்ந்து 100 ரன்களைக் கடக்கச் செய்தனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு கிறிஸ் வோக்ஸ் ஸ்டம்ப்பைப் பறக்க விட்டார் சீல்ஸ்.

ஆனால் இங்குதான் வெஸ்ட் இண்டீஸின் கேப்டன் பிராத்வெய்ட்டுக்கு கொஞ்சம் கூட கற்பனை வளம் இல்லை. 9 விக்கெட் போய் விட்டது இனி என்ன? யாரையாவது விட்டு ஷமியும் பும்ராவும் ஆண்டர்சனுக்கு ஏத்து ஏத்து என்று ஏத்தினார்களே அப்படி செய்து காலி செய்திருக்க வேண்டும், ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் ஏனோ அதன் பிறகு சொரத்தின்றி போக ஜாக் லீச் 141 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார்.

தன் 2வது டெஸ்ட்டில் ஆடும் மஹ்மூத் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்தார். 114/9 லிருந்து 204 வரைக்கும் கொண்டு சென்று மானத்தைக் காப்பாற்றினர். இந்தப் பிட்ச் இனி பிளாட்டாகி விடும் ஆகவே வெஸ்ட் இண்டீஸ் நல்ல ஸ்கோர் செய்தால் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்தை மடக்கி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.  கடைசி விக்கெட்டை ஜெர்மைன் பிளாக்வுட் எடுக்க நேரிட்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப், ரோச்  தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்ற சீல்ஸ் 3 விக்கெட்டுகளி வீழ்த்தினார்.
Published by:Muthukumar
First published:

Tags: England, England test, West indies

அடுத்த செய்தி