ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WI vs ENG: போவெல் சிக்சர் மழை சதத்தில் இங்கிலாந்தை தட்டித் தூக்கிய மே.இ.தீவுகள் - இந்திய அணிக்கு ‘ஸ்ட்ராங் மெசேஜ்’

WI vs ENG: போவெல் சிக்சர் மழை சதத்தில் இங்கிலாந்தை தட்டித் தூக்கிய மே.இ.தீவுகள் - இந்திய அணிக்கு ‘ஸ்ட்ராங் மெசேஜ்’

53 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் விளாசிய ஆட்ட நாயகன் போவெல்.

53 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் விளாசிய ஆட்ட நாயகன் போவெல்.

மேஇ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3வது டி20 போட்டியில் ரோவ்மன் போவெலின் சிக்சர்கள் மழை சதத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-1 என்று இங்கிலாந்து வசம் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மேஇ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3வது டி20 போட்டியில் ரோவ்மன் போவெலின் சிக்சர்கள் மழை சதத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-1 என்று இங்கிலாந்து வசம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவெல் 53 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 20 ஓவர்களில் 224 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தும் விடாப்பிடியாக விரட்டியது, ஆனால் 204/9 என்று முடிந்தது.

  மைதானம் நெடுக இங்கிலாந்து பந்து வீச்சை விரட்டி சிக்சர் மழை பொழிந்த ரோவ்மென் போவெல், டி20யில் சதமெடுத்த 3வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார். முன்னதாக கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் ஆகியோர் சதம் கண்டனர்.

  போவெல், நிகோலஸ் பூரான் (43 பந்தில் 70), 3வது விக்கெட்டுக்காக 67 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணியில் 3 அறிமுக வீரர்கள் ஆடினர், சால்ட், ஹாரி புரூக், சசெக்ஸ் ஆல்ரவுண்டர் ஜார்ஜ் கார்ட்டன் ஆகியோர் ஆவார்கள்.

  ஆனால் நேற்றைய தினம் ரோவ்மென் போவெலுடையது, திகைப்பூட்டும் அதிரடியுடன் சில டச் ஷாட்களும் அவரது இன்னிங்சின் சிறப்பம்சங்கள், ஐபிஎல் ஏலத்தில் இருந்தால் பெரிய அளவில் விலை போவார் என்று எதிர்பார்க்கலாம். 6வது ஓவரில் 48/2 என்ற நிலையில் பூரானும், போவெலும் இணைந்தனர். முன்னதாக ஷேய் ஹோப்-4, பிரண்டன் கிங்1-10 ஆகியோர் சடுதியில் வெளியேறினர்.

  அதன் பிறகு மைதானத்தில் வெள்ளைப்பந்து விளக்கொளியில் காணாமல் போய்க்கொண்டிருந்தன. போவெலும், பூரானும் இணைந்து 15 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விளாசினர். இங்கிலாந்தில் ஆதில் ரஷீத் இந்த அடிதடியிலும் 25 ரன்களையே விட்டுக் கொடுத்ததும் தொடக்க பவுலர் டாப்லி 30 ரன்கள் விட்டுக் கொடுத்ததும் அதிசயமே. கேப்டனாக மொயின் அலிக்கு மோசமான மேட்ச் ஆக அமைந்தது, ஒரு ஓவர் வீசி 14 ரன்களையும் பேட்டிங்கில் டக் அவுட்டும் ஆனார்.

  இங்கிலாந்து தரப்பில் பேட்டிங்கில் ஜேசன் ராய் 2 சிக்சர்களுடன் 19 ரன்கள் விளாசி அவரும் டாம் பேண்ட்டன் (39 பந்தில் 73, 3 பவுண்டரி 6 சிக்சர்) 3 ஓவர் 33 ரன்கள் தொடக்கம் அளித்தனர். டாம் பேண்ட்டன் வெளுத்து வாங்க வெஸ்ட் இண்டீஸ் அணி 7.5 ஓவர் 79 ரன்கள் விளாசியது. ஆனால் மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் சொதப்ப 12 ஓவர்களில் 129/5 என்று ஆனது இங்கிலாந்து. 8 ஓவர்களில் 95 ரன்கள் என்பது மிகப்பெரிய டாஸ்க். இதில் பில் சால்ட் என்ற இங்கிலாந்து அறிமுக வீரர் 24 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சர்களுடன் பின்னி எடுத்தார். 57 ரன்களில் இவர் ஷெப்பர்டிடம் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

  இவருக்கு ஸ்டாண்ட் கொடுக்க சரியான ஆட்கள் இல்லை. இங்கிலாந்து கடைசி 4 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்து 204/9 என்று முடிந்தது. மே.இ.தீவுகள் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிகபட்சமாக 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிரன் பொலார்ட் 2 விக்கெட்டுகள். இந்த வெற்றி மூலம் அடுத்து இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள் இந்திய அணிக்கு ஒரு ஸ்ட்ராங் மெசேஜைக் கொடுத்துள்ளது.

  இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி வரும் சனியன்றும், 5வது டி20 போட்டி ஞாயிறன்றும் நடைபெறுகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: England, T20, West indies