Home /News /sports /

ஆஷஸ் தோல்வியைச் சரிகட்ட சொத்தை வெஸ்ட் இண்டீசை வீழ்த்தும் இங்கிலாந்தின் ஆசை தகர்ப்பு

ஆஷஸ் தோல்வியைச் சரிகட்ட சொத்தை வெஸ்ட் இண்டீசை வீழ்த்தும் இங்கிலாந்தின் ஆசை தகர்ப்பு

மட்டையைச் சுற்றி பீல்டர்களைப் போட்டும் பாச்சா பலிக்கவில்லை.

மட்டையைச் சுற்றி பீல்டர்களைப் போட்டும் பாச்சா பலிக்கவில்லை.

மே.இ.தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது, இங்கிலாந்தின் ஜாக் கிராலி (121), ரூட் (109) சதங்கள் அடித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் மடியாமல் 147/4 என்று அபாரமாக தடுத்து இங்கிலாந்தின் வெற்றியைத் தடுத்தது.

மேலும் படிக்கவும் ...
    மே.இ.தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது, இங்கிலாந்தின் ஜாக் கிராலி (121), ரூட் (109) சதங்கள் அடித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் மடியாமல் 147/4 என்று அபாரமாக தடுத்து இங்கிலாந்தின் வெற்றியைத் தடுத்தது.

    ஆஷஸில் மண்ணைக்கவ்வி இங்கே வெற்றி பெறலாம் என்று நினைத்த இங்கிலாந்துக்கு ஆப்பு வைத்தது மே.இ.தீவுகள், மட்டையைச் சுற்றி பீல்டர்களைப் போட்டும் பந்து வீச்சில் தாக்கத் இல்லாததால் மே.இ.தீவுகள் எளிதில் ட்ரா செய்தது.

    ஆட்ட நாயகனாக மே.இ.தீவுகளின் பேட்டர் நிக்ருமா போனர் தேர்வு செய்யப்பட்டார், இவர் முதல் இன்னிங்சில் 123 ரன்களை எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 375 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்தைக் காட்டிலும் 64 ரன்கள் கூடுதலாகப் பெற்றது, இந்நிலையில் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் கிராலி, ரூட் சதங்களுடன் 349/6 என்று டிக்ளேர் செய்ய வெஸ்ட் இண்டீஸுக்கு 286 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 147/4 என்று டிரா செய்தது, இங்கிலாந்து ஸ்பின்னர் ஜாக் லீச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2வது இன்னிங்ஸிலும் நிக்ருமா போனர் 38 நாட் அவுட். ஹோல்டர் 37 நாட் அவுட். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் முடிவில் தொடர் 0-0 என்று உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும் இதனையடுத்து டிரா ஆனதால் இங்கிலாந்துக்கு ட்ரா பின்னடைவே.

    முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் விளாசினார். ஜாக் கிராலி 121 ரன்னிலும், ரூட் 109 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கபட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராத்வெயிட் மற்றும் ஜான் கேம்பல் களமிறங்கினர். பிராத்வெயிட் 33 ரன்னிலும், கேம்பல் 22 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த ப்ரூக்ஸ் 5 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் 5-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பொனர் 38 ரன்னிலும், ஹொல்டர் 37 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பார்படாசில் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: England test, First test cricket match, West indies

    அடுத்த செய்தி