தொடரை வெல்வது யார்? இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

ENG vs WI

England vs West Indies | இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் அணி இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

 • Share this:
  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

  இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதால் முந்தைய டெஸ்டில் நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியுடன் இணைந்து உள்ளது அந்த அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

  படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

  படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

  படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு

  வெஸ்ட் இண்டீஸ்அணியை பொறுத்த வரை பந்துவீச்சில் வலுவாக இருந்தாலும் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். கடைசி டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கிலும் ஜொலித்தால் ஆட்டம் விறுவிறுப்பாக இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  Published by:Vijay R
  First published: