வெற்றி அடையாளமாக தொடங்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: 3 மாதங்களுக்கு பின் மீண்டும் தொடக்கம்..

ENG vs WI

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.

  • Share this:
கொரோனோ வைரஸை வென்றதன் அடையாளமாக விளையாட்டு உலகில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளன. இதை நிரூபிக்கும் விதமாக இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.

கொரோனோ வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்ட சர்வதேச போட்டிகளை நடத்த கிரிக்கெட் உலகம் தயாராகி வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்தில் கொரோனோ பரவல் கட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளை தொடங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட சம்மதித்தது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி சௌத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. மழை குறுக்கிட்டதால் டாஸ் தாமதமாக போடப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன.

வீரர்கள் மத்தியில் கொரோனோ பரவலை தடுக்க ஒரு மாதத்திற்கு முன்பே வீரர்கள் வரவழைக்கப்பட்டு தனிமைப்படுத்தல், கொரோனோ பரிசோதனை என பல்வேறு கட்ட நடைமுறைக்கு பிறகு விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி களமிறங்கினர். டொமினிக் சிபிலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதையடுத்து ஜோ டேன்லி களமிற்ங்கினார்.

நேற்றைய நாள் போட்டியில் மழை குறுக்கிட்டதாலர் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 35 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
Published by:Vijay R
First published: