• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • England vs Sri Lanka | 40 ரன்களுக்கு 7 விக். இழந்து உடைந்து போன இலங்கை அணி: அதைவிடவும் சொதப்பலாக ஆடி வென்ற இங்கிலாந்து

England vs Sri Lanka | 40 ரன்களுக்கு 7 விக். இழந்து உடைந்து போன இலங்கை அணி: அதைவிடவும் சொதப்பலாக ஆடி வென்ற இங்கிலாந்து

ஜோ ரூட் 79 நாட் அவுட். வெற்றி பெற வைத்த இன்னிங்ஸ்.

ஜோ ரூட் 79 நாட் அவுட். வெற்றி பெற வைத்த இன்னிங்ஸ்.

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை தோற்றது இங்கிலாந்து சொதப்பலாக ஆடியது எப்படி முழு விபரம்.

  • Share this:
    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இலங்கை அணி 42.3 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து தட்டுத் தடுமாறியது, ஆனால் அதன் பிறகு ஜோ ரூட் 79 நாட் அவுட் மூலம் 34.5 ஓவர்களில் 189/5 என்று சற்றே போராடி வீழ்த்தியது.

    முன்னதாக கிறிஸ் வோக்ஸ் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். மேலும் 2008-ல் ஸ்டூவர்ட் பிராட் 10 ஓவர்களில் 14 ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த சிக்கன பவுலர் என்ற சாதனையை நிகழ்த்திய பிறகு நேற்று 18 ரன்களுக்கு 4 விக்கெட் என்று இரண்டாவது இங்கிலாந்து அதி சிக்கன பவுலர் ஆனார் வோக்ஸ்.

    இலங்கை அணியில் கேப்டன் குசல் பெரேரா 73 ரன்களையும் ஹசரங்கா 54 ரன்களையும் எடுத்து 99 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசி 7 விக்கெட்டுகளை இலங்கை 40 ரன்களில் இழந்து 185 ரன்களுக்குச் சுருண்டது.

    இலக்கை விரட்டும் போது ஜானி பேர்ஸ்ட்டோ வழக்கம் போல் அனாயாச மட்டை சுழற்றலில் ஈடுபட்டு 21 பந்துகளில் 6 பவுண்ட்ரி 1 சிக்சருடன் 43 ரன்கள் என்று அதிரடி தொடக்கம் கொடுத்தார். ஆனால் சமீரா (3/50) பிரமாத வேகம் காட்ட இங்கிலாந்து அணி சொதப்பி சரிவு கண்டது, லிவிங்ஸ்டன், மோர்கன், சாம்பிலிங்ஸ் ஒற்றை இலக்கத்தில் வெளியேற பேர்ஸ்டோவை பெர்னாண்டோ வீழ்த்த இங்கிலாந்து 80-4 என்று ஆனது.

    ஆனால் தன் 150வது ஒருநாள் போட்டியில் ஆடும் ஜோ ரூட் (79 நாட் அவுட்), மொயின் அலி (28) இணைந்து கூட்டணி அமைக்க ஸ்கோரை 171 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், ஜோ ரூட் ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்கள் மைல்கல்லை எட்டினர்.

    டி20தொடரில் 3-0 ஒயிட் வாஷ் வெற்றி நம்பிக்கையுடன் ஒருநாள் தொடரை தொடங்கிய இங்கிலாந்து பவுலிங்கில் அசத்தியது. பதும் நிசாங்கா (5), வோக்ஸின் ஸ்லோயர் ஒன்னில் அவுட் ஆனார். சரித் அசலங்காவை டேவிட் வில்லே டக் அவுட் செய்தார். தசுன் சனகாவுக்கு வோக்ஸ் வீசிய பந்து மிக நல்ல பந்து லேட் ஸ்விங் எட்ஜ் ஆனது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒரு முனையில் கேப்டன் குசல் பெரேரா ஃப்ரீயாக ஆடினார், ஹசரங்கா அவருக்குக் கைகொடுத்தார். ஆதில் ரஷீத்தை ஹசரங்கா ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி ஆக்ரோஷம் காட்டினார். இருவரும் சேர்ந்து 99 ரன்கள் சேர்த்தனர். 29வது ஓவர் தொடங்கிய போது 145/3 என்று இருந்தது இலங்கை.

    மீண்டும் கிறிஸ் வோக்ஸ் வர ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை தூக்கி அடித்தார் ஹசரங்கா ஷாட் சரிவர மாட்டாமல் டீப்பில் லிவிங்ஸ்டனின் அருமையான கேட்சாக மாறியது. வோக்ஸ் மீண்டும் அடுத்த ஓவரில் தனஞ்ஜய லக்‌ஷன் என்பவரது எட்ஜைப் பிடித்தார், கேட்ச் ஜோ ரூட். ரமேஷ் மெண்டிஸ் மொயின் அலியிடம் எல்.பி.ஆனார். பெரேரா, டேவிட் வில்லேயிடம் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். சமிகா கருணரத்னே 19 ரன்னில் பெரிய சிக்ஸ் அடித்தார், இலங்கை அணி 40 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்து தோற்றது. ஆட்ட நாயகன் கிறிஸ் வோக்ஸ்.

    இங்கிலாந்து அணி 50/0 என்ற நிலையிலிருந்து 80/4 என்று தடுமாறி கடைசியில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை கண்டுள்ளது. 2வது போட்டி வரும் வியாழனன்று கியா ஓவலில் நடைபெறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: