இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்ஹாம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியே தன் கடைசி ஒருநாள் போட்டி என்று அறிவித்து விட்டார், எனவே இங்கிலாந்து தோற்றுக் கொண்டிருக்கும் தறுவாயில் இது ஒரு வரவேற்கத்தக்க கவனச்சிதறல்தான்.
பென் ஸ்டோக்ஸ் தன் 105வது ஒருநாள் போட்டியை, அதுவும் கடைசி போட்டியாக ஆடுகிறார். இவர் 81 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இது வருக்கு ஒரு சொந்த மைல்கல்லாக அமையும் என்பதோடு, இங்கிலாந்து வெற்றி பெற்றால் நல்ல நினைவுகளுடன் அவர் ஓய்வு பெறுவார்.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் இங்கிலாந்து 13 போட்டிகளில் வென்றுள்ளது, அதிலும் கடைசி 9 போட்டிகளில் 8-ல் வென்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத் திரும்பியுள்ளார் அதே போல் டெஸ்ட்டில் அறிமுகமான மேத்யூ பாட்ஸ் இந்த ஒருநாள் போட்டி அணியில் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியில் பவுமா இல்லாததால் கேசவ் மகராஜ் கேப்டானாக உள்ளார், குவிண்டன் டி காக் தொடக்கத்தில் உள்ளார், அவருடன் ஜானிமேன் மலான் இருக்கிறார், இவர் ஒருநாள் கிரிக்கெட்டை பாரம்பரிய முறைப்படி ஆடுபவர் என்பதால் ஆரம்ப ஸ்விங்கை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பாக்கலாம், ஆனால் சாதாரண வீரர் அல்ல, இவரது ஒருநாள் சராசரி 59 என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் இதுவரை 63 ஒருநாள் போட்டிகளில் சந்தித்துள்ளன, இதில் 30 வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது, இங்கிலாந்து 28 வெற்றிகள் பெற்றுள்ளது, இந்த ரெக்கார்டை மேம்படுத்த இங்கிலாந்துக்கு இப்போது ஒரு அருமையான வாய்ப்பு.
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, டேவிட் வில்லே, கிரெய்க் ஓவர்டன், ஆதில் ரஷீத், மேத்யூ பாட்ஸ்.
தென் ஆப்பிரிக்கா அணி: குவிண்டன் டி காக், ஜேனிமன் மலான், ராசி வான் டெர் டூசன், அய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஆண்டி பெலுக்வயோ, கேஷவ் மகராஜ் (கேப்டன்), ஆன்ரிச் நார்ட்யே, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி அல்லது யான்சென்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England, ODI, South Africa