Home /News /sports /

பழிதீர்த்த தென் ஆப்பிரிக்கா: ரைலி ரூசோவ் 96, ஷம்சி, பெலுக்வயோ அபாரம்- இங்கிலாந்து தோல்வி

பழிதீர்த்த தென் ஆப்பிரிக்கா: ரைலி ரூசோவ் 96, ஷம்சி, பெலுக்வயோ அபாரம்- இங்கிலாந்து தோல்வி

ஆட்ட நாயகன் ரைலி ரூசோவ்

ஆட்ட நாயகன் ரைலி ரூசோவ்

கார்டிஃபில் நேற்று இரவு நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து 207 ரன்கள் விளாசி பிறகு இங்கிலாந்தை 149 ரன்களுக்குச் சுருட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் ஒருபோட்டி மீதமுள்ள நிலையில் 1-1 என்று சமன் ஆகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
    கார்டிஃபில் நேற்று இரவு நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து 207 ரன்கள் விளாசி பிறகு இங்கிலாந்தை 149 ரன்களுக்குச் சுருட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் ஒருபோட்டி மீதமுள்ள நிலையில் 1-1 என்று சமன் ஆகியுள்ளது.

    முதல் போட்டியில் தரக்குறைவாக பீல்டிங் பவுலிங் செய்த தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டியில் பீல்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் கண்டது குறிப்பாக கடந்த போட்டியில் செம உதை வாங்கிய போது 4 ரன்களில் ஆட்டமிழந்த பழைய வீரர் ரைலி ரூசோவ் நேற்று 10 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 55 பந்தில் 96 ரன்கள் விளாசினார். அதே போல் முதல் டி20-யில் 4 ஓவர்களில் 63 ரன்கள் விளாசப்பட்ட பெலுக்வயோ இந்தப் போட்டியில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கடந்த போட்டியில் செம சாத்து வாங்கிய ரிஸ்ட் ஸ்பின்னர் ஷம்ஸி 4 ஓஅர் 27 ரன் 3 விக்கெட் என்றும் அசத்தி ஒருவிதத்தில் இங்கிலாந்தை பழி வாங்கினர்.

    கோல்பாக் ஒப்பந்தத்தில் தென் ஆப்பிரிக்காவை விட்டு ஓடி வந்து பணத்துக்காக ஹாம்ப்ஷயர் அணிக்காக ஆடிய ரூசோவ் இப்போதுதான் மீண்டும் தாயகம் திரும்பினார். 2016-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணிக்குத் திரும்பியுள்ளார், பிரமாதமான அதிரடி வீரர்.

    இந்த ஆண்டு வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் சோமர்செட் அணிக்கு ஆடிய இடது கை காட்டடி வீரர் ரைலி ரூசோவ் 623 ரன்களை விளாசினார், இதில் இவர் மட்டுமே 42 சிக்சர்களை விளாசி முதலிடம் பிடித்தார். நேற்று 10 பவுண்டரி 5 சிக்சர்கள் விளாசி 96 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து பவுலர் ஜோர்டான் (1/43) ரூசோவை சதம் எடுக்கவிடாமல் வீசி அசத்தினார்.

    ரீசா ஹென்றிக்ஸ் (32 பந்து 53) உடன் ரூசோவ் ஒரு அரைசதக் கூட்டணியையும் கடந்த போட்டியில் 28 பந்தில் 72 விளாசிய ஸ்டப்ஸ் இந்தப் போட்டியில் 12 பந்தில் 15 நாட் அவுட் என்று அடக்கி வாசித்தா, இவருடனும் ரூசோ ஒரு அரைசதக் கூட்டணி அமைத்தார். ரீசா ஹென்றிக்ஸ் தொடர்ந்து 2வது அரைசதத்தை 27 பந்துகளில் எடுத்து பேர்ஸ்டோவின் அற்புத கேட்சுக்கு வெலியேறினார். ரிச்சர்ட் கிளீசன் (1/38) பேர்ஸ்டோவின் பவுண்டரி கேட்சை வெகுவாக ரசித்தார். இங்கிலாந்தில் மொயீன் அலி, ரிச்சர்ட் கிளீசன், ஜோர்டான் தலா 1 விக்கெட்டை எடுக்க தென் ஆப்பிரிக்கா 207/3 என்று முடிந்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை. ஜாஸ் பட்லர் (14 பந்தில் 29) பெலுக்வயோவை இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரி விளாசினார், பிறகு இவர் பந்திலேயே கொடியேற்றி மிட் ஆனில் கேட்ச் ஆனார். டேவிட் மலான் (5) ஜேசன் ராய் (20) இருவரும் முறையே ஸ்பின்னர்கல் மகராஜ், ஷம்சியிடம் வெளியேறினர். 77/3 என்ற நிலையில் 9வது ஓவரில் அபாய ஜோடி பேர்ஸ்டோ, மொயின் அலி சேர்ந்தனர். ஆனால் இந்த முறை பாச்சா பலிக்கவில்லை, 17 ரன்களில் மொயின் அலி மகராஜின் டைவிங் கேட்சுக்கு வெளியேற, பேர்ஸ்டோ 21 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ரபாடாவிடம் வீழ்ந்தார்.

    லியாம் லிவிங்ஸ்டன் 10 பந்தில் 18 விளாசி பெலுக்வயோ பந்தில் காலியானார். இங்கிலாந்து 141/7. பிறகு லுங்கி இங்கிடி (2/11) முடித்து வைத்தார். ஆட்ட நாயகன் ரைலி ரூசோவ். 3வது இறுதிப் போட்டி ஞாயிறன்று நடைபெறுகிறது
    Published by:Muthukumar
    First published:

    Tags: England, South Africa, T20

    அடுத்த செய்தி