Home /News /sports /

ENG vs SA-இங்கிலாந்தை காப்பாற்றிய வருண பகவான் - ‘பாஸ்பால்’ ஆக்ரோஷம் ’புஸ்’- 116/6

ENG vs SA-இங்கிலாந்தை காப்பாற்றிய வருண பகவான் - ‘பாஸ்பால்’ ஆக்ரோஷம் ’புஸ்’- 116/6

ஜானி பேர்ஸ்டோ கிளீன் பவுல்டு நார்ட்யே. லார்ட்ஸ் டெஸ்ட்

ஜானி பேர்ஸ்டோ கிளீன் பவுல்டு நார்ட்யே. லார்ட்ஸ் டெஸ்ட்

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நேற்று தொடங்கியது, இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் என்று சொதப்பி வருகிறது. ஆட்டம் நிறுத்தப்பட்ட போது ஆலி போப் 61 ரன்களுடனும் ஸ்டூவர்ட் பிராட் 0-விலும் களத்தில் இருக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நேற்று தொடங்கியது, இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் என்று சொதப்பி வருகிறது. ஆட்டம் நிறுத்தப்பட்ட போது ஆலி போப் 61 ரன்களுடனும் ஸ்டூவர்ட் பிராட் 0-விலும் களத்தில் இருக்கின்றனர்.

இன்று முதல் இந்த டெஸ்ட் முடியும் வரை நாளொன்றுக்கு 98 ஓவர்கள் வீச வேண்டும். என்னவோ நாங்கள் மெக்கல்லம் வழியில் ‘பாஸ்பால்’ முறைதான் இனி ஆக்ரோஷம்தான் என்னா ஆனாலும் சரி என்றெல்லாம் இங்கிலாந்து ஆட்டம் போட்டனர், தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர், அந்த மாதிரி அணுகுமுறையில் இங்கிலாந்து மூஞ்சியில் கரிப்பூசிக் கொள்ளப்போகிறார்கள் என்றார், அதுதான் நடந்தது. மரபான கிரிக்கெட் ஆட்டத்தில்தான் நாங்கள் இந்தியாவை வென்றோம் என்றும் கூறினார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர். டாஸ் வென்ற அவர் முதலில் இங்கிலாந்தை இறக்கி அழகுபார்த்தார்.

கேகிசோ ரபாடா, ஆன்ரிச் நார்ட்யேவிடம் மொத்தமாக மடிந்தது இங்கிலாந்து, மார்க்கோ யான்சென் வேறு விதத்தில் பந்துகளை ஸ்விங் செய்தார். அதில் பார்மில் உள்ள டாப் பிளேயர் ரூட் எல்.பி.ஆகி 8 ரன்களில் வீழ்ந்தார். பாஸ்பால் அணுகுமுறையின் முக்கியத் துருப்புச் சீட்டான ஜானி பேர்ஸ்டோ, வைட் ஆஃப் த கிரீசிலிருந்து 147 கிமீ வேகத்தில் நார்ட்யே ஒரு பந்தை உள்ளே கொண்டு வர அதை ஏதோ நம்மூர் ஷர்துல் தாக்கூர் பந்து போல் ஆன் த அப்பில் அடிக்கப் பார்த்தார், பந்து உள்ளே புகுந்து ஸ்டம்பை தொந்தரவு செய்தது. டக் அவுட் ஆனார் பேர்ஸ்டோ. இது இவரது 16வது டக் ஆகும்.

பென் ஸ்டோக்ஸ் அவ்வப்போது பாஸ்பால் அணுகுமுறையில் இறங்கி வந்து பார்த்தார், ஆனால் ஒருமுறை ரபாடாவிடம் வயிற்றில் செம அடி வாங்கினார். இருப்பினும் அவர் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து நார்ட்யே ரவுண்ட் த விக்கெட்டில் விசிய பந்து ஒன்று உள்ளே வந்து பிறகு வெளியே சற்றே கட் ஆக ஸ்கொயர் ஆன ஸ்டோக்ஸ் எட்ஜ் செய்து வெளியேறினார்.

பென் ஃபோக்ஸும் நார்ட்யேவின் செம ஸ்பீடு பந்தில் 6 ரன்களுக்கு பவுல்டு ஆகி வெளியேறினார். முன்னதாக தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ், பெரிய மேட் ஹைடன் என்ற நினைப்பில் பேட்டை விட்டார், அசிங்கமான ஒரு எட்ஜ் பவுண்டரி போனது, பிறகு ரபாடா ஒரு அருமையான பந்தில் அவரது எட்ஜைப் பிடித்தார். ஜாக் கிராலியும் 9 ரன்களில் ரபாடாவிடம் எட்ஜ் ஆகி மார்க்ரமின் நல்ல கேட்சுக்கு வெளியேறினார்.

ஆலி போப் 61 ரன்கள் எடுக்கவில்லை எனில் இங்கிலாந்து நிலவரம் கலவரம்தான். இவரும் யான்செனின் இன்ஸ்விங்கர்களை கணிக்க முடியாமல் திணறினார், தடவினார்.

கடைசியில் இங்கிலாந்து 116/6 என்ற போது மழை வந்தது, அதன் பிறகு ஆட்டம் நடக்கவில்லை. பாஸ்பால் என்று கடைசியில் இதுவும் சாத்தியமாகாமல், மரபான டெஸ்ட் ஆட்டமும் மறந்து போய் இங்கிலாந்து திண்டாடப் போவது உறுதி.
Published by:Muthukumar
First published:

Tags: England, First test cricket match, South Africa

அடுத்த செய்தி