முகப்பு /செய்தி /விளையாட்டு / சொன்னதைச் செய்தார், இங்கிலாந்து முகத்தில் கரியைப் பூசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர்

சொன்னதைச் செய்தார், இங்கிலாந்து முகத்தில் கரியைப் பூசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர்

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிந்து விட்டது, இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து செம உதை வாங்கியது. சமீபகாலமாக Bazball என்று பேசப்பட்ட இங்கிலாந்தின் நவீன ஆக்ரோஷ அதிரடி ஆட்டம் என்பது தோல்வியடைய இங்கிலாந்தை அக்கு வேறு ஆணி வேறாக கழற்றியது தென் ஆப்பிரிக்கா. லார்ட்ஸில் 161 ரன்கள் முன்னிலையைக் கூட எட்ட முடியாமல் இங்கிலாந்து 149 ரன்களுக்கு 2வது இன்னிங்சில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிந்து விட்டது, இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து செம உதை வாங்கியது. சமீபகாலமாக Bazball என்று பேசப்பட்ட இங்கிலாந்தின் நவீன ஆக்ரோஷ அதிரடி ஆட்டம் என்பது தோல்வியடைய இங்கிலாந்தை அக்கு வேறு ஆணி வேறாக கழற்றியது தென் ஆப்பிரிக்கா.

லார்ட்ஸில் 161 ரன்கள் முன்னிலையைக் கூட எட்ட முடியாமல் இங்கிலாந்து 149 ரன்களுக்கு 2வது இன்னிங்சில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

இந்த பாஸ்பால் ஆக்ரோஷமெல்லாம் இங்கிலாந்து முகத்தில் கரியைப்பூசப் போகிறது என்று இந்த டெஸ்ட்டுக்கு முன்பே கூறினார் டீன் எல்கர். கடைசியில் மரபான கிரிக்கெட்டே வெற்றி பெற்றது, இங்கிலாந்து இந்த டெஸ்ட்டில் அசிங்கமாக ஆடியது என்றால் மிகையாகாது. இங்கிலாந்து லயன்ஸிடம் தோற்ற தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தி விட்டது.

இனி இதுதான் அணுகுமுறை என்று இறுமாப்புடன் திரிந்த இங்கிலாந்துக்கு எல்லா பவுலர்களையும் அடிக்க முடியாது, பவுலர்களெல்லாம் மடையர்கள் அல்ல என்பதை நிரூபித்தது தென் ஆப்பிரிக்கா. 326 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட் ஆகி 161 ரன்கள் முன்னிலையுடன் பந்து வீச வந்தது.

இங்கிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமே 82.4 ஓவர்கள்தான் ஆடியது, இரண்டாவது இன்னிங்சில் மகராஜ், நார்ட்யே, ரபாடா, யான்சென் அனைவரும் இங்கிலாந்தை பிரித்துப் போட்டனர். இனி இங்கிலாந்து அணியை ஏதாவது பட்டி டிங்கரிங் செய்துதான் ஒட்ட வைக்க முடியும். 4 டெஸ்ட்களில் பெரிய பெரிய இலக்குகளை சேஸ் செய்தது எல்லாம் அஸ்வின் சொன்னது போல் ‘பால்பாயாசம்’ ஆன பிட்சில்தான். பிட்சில் கொஞ்சம் ஸ்விங், பவுன்ஸ் இருந்தால் இங்கிலாந்து அவ்வளவுதான் என்பதும் இப்போது புரிந்தது.

ரபாடாவும் நார்ட்யேவும் 13 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் அலெக்ஸ் லீஸுக்கு கேட்ச் விடப்பட்டது, ஆனால் டீன் எல்கர் பிரமாதமாக ஸ்பின்னர் மகராஜை விரைவில் அறிமுகம் செய்தார். அவரும் பிரமாதமாக வீசி ஜாக் கிராலியை எல்.பி. ஆக்கினார். இவர் திமிர்த்தனமாக ஸ்வீப் ஆடப்போய் அவுட் ஆனார். ஆலி போப் 5 ரன்களில் பேக் ஃபுட்டில் கட்டிப்போடப்பட்டு எல்.பி ஆனார். மகராஜ் 2 விக்கெட்.

ஜோ ரூட், லுங்கி இங்கிடியின் உள்ளே வந்து சற்றே வெளியே எடுத்த பந்தில் எட்ஜ் ஆகி 6 ரன்களில் ஆட்டமிழந்தார், இவரும் ரிவர்ஸ் ஸ்வீப் ஒருமுறை செய்தார். கேட்டால் பாஸ்பால் என்பார்கள். நார்ட்யே வந்தார் 10 பந்துகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், 2வது முறையாக பேர்ஸ்டோ (18) விக்கெட்டை காலி செய்தார், ஷார்ட் பிட்ச் பந்து ஆஃப் ஸ்டம்ப் லைன், எட்ஜ் ஆனார். விக்கெட் கீப்பர் வெரைன் கேட்ச். அடுத்த நார்ட்யே விக்கெட் அலெக்ஸ் லீஸ் (35), இவர் ரவுண்ட் த விக்கெட்டில் பிரமாதமான 143 கிமீ வேகபந்து எட்ஜ் வெளியேறினார்.  பென் ஃபோக்ஸும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களில் ரபாடாவை ரேஷ் ஷாட் ஆடப்போய் மகராஜின் அட்டகாசமான கேட்சுக்கு வெளியேறினார், இடையே ஸ்டூவர்ட் பிராட் கண்ணை மூடிக்கொண்டு சுழற்றினார். அதில் எக்குத்தப்பாக பட்டு நார்ட்யே பந்து ஒன்று சிக்சருக்குப் பறந்தது. 29 பந்துகளில் 35 ரன்கள், 5 பவுண்டரி 1 சிக்ஸ். கடைசியில் ரபாடாவின் ஸ்லோ பந்தில் சிக்கினார்.

மார்க்கோ யான்சென் தன் பங்குக்கு பாட்ஸ், ஆண்டர்சனை வீழ்த்த இங்கிலாந்து கதை முடிந்தது. 7 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட்டில் எடுத்த ரபாடா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இனி மரபான கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்து திரும்பித்தான் ஆகவேண்டும். ரிஷப் பண்ட் ஆடுகிறார் என்றால் அவருக்கு இங்கு முழு சுதந்திரம் உண்டு. அவர் மட்டும்தான் அப்படி ஆடுவார், டீமே ஆடாது. என்பதை இங்கிலாந்து நினைவில் கொள்ள வேண்டும், மெக்கல்லம் இப்படி ஆக்ரோஷமாக ஆடி எத்தனை டெஸ்ட்களை நியூசிலாந்துக்கு வெற்றி பெற்றுக் கொடுத்திருப்பார் என்று பார்த்தால் ஒன்றுமில்லைதான்.

First published:

Tags: England, South Africa, Test cricket