பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அதிக டாட் பால் வைத்தும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
8வது டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேனா இறுதி போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக ஹான் மசூத் 38 ரன்களும் சதப் கான் 20 ரன்களை எடுத்தனர்.
சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டையும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜொர்டன் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் வலுவான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
குறிப்பாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்து வெளியேறியவுடன் களத்திற்கு வந்த பென் ஸ்டோக்ஸ் பந்துகளை தூக்கி அடிக்காமல் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணி சந்தித்த முதல் 82 பந்துகளில் 41 டாட் பந்துகளை சந்தித்து 50 சதவீத டாட் பந்துகளை எதிர்கொண்டது.
இதையும் படிங்க: இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் : பதிலடி கொடுத்த இர்பான் பதான்!
இருப்பினும் குறைந்த ரன்கள் என்பதால் முதல் இரண்டு விக்கெட்டை இழந்த பின்னர் இங்கிலாந்து அணி பந்துகளை பவுண்டர்கள் நோக்கி ஆடாமல் பந்துகளை தடுத்து ரன்களை சேகரிக்க ஆரம்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுக்க பல வியூகங்களை வகுத்தாலும் அது தோல்வியிலே முடிந்தது.
அடித்து ஆடக்கூடிய பந்துகளை மட்டும் தூக்கி அடிக்கமால் தரையில் ஓடும்படி பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் பென் ஸ்டோக்ஸ் . ஸ்டோக்ஸ்இங்கிலாந்து அணியில் பட்லரில் தொடங்கி கிறிஸ் ஜோடர்ன் வரை டி20 போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைக்கும் திறன் இருந்தாலும் பென் ஸ்டோக்ஸ் தனது பொறுப்பான ஆட்டத்தால் விக்கெட்டை இழக்க விடாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடிந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியிலும் கடைசி வரை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்ற உதவிய ஸ்டோக்ஸ், இன்று டி20 உலக்கோப்பை இறுதி போட்டியில் பாணியை பயன்படுத்தி அந்த அணிக்கு மற்றொரு டி20 உலகக்கோப்பை வெல்ல உதவியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England, Melbourne, Pakistan cricket, T20 World Cup