England vs Pakistan | கேப்டன் பாபர் ஆசம் ‘டக்’ அவுட்; இங்கிலாந்து ‘பி’ அணியிடம் படுதோல்வி கண்ட பாகிஸ்தான்

120 ரன்கள் கூட்டணி அமைத்த வெற்றி ஜோடி ஜாக் கிராலி, மலான்.

 • Share this:
  இங்கிலாந்தின் பிரதான அணியில் 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முற்றிலும் புதிய இங்கிலாந்து அணி களமிறங்கி முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

  கார்டிஃப் மைதானத்தில் நேற்று பகலிரவுப் போட்டியாக நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். லங்காஷயர் பவுலரான சாகிப் மஹ்மூத் முதல் பந்திலேயே இமாம் உல் ஹக்கை எல்.பி. செய்து டக் அவுட் ஆக்கினார். பிறகு இதே ஓவரின் 3வது பந்தில் மிக முக்கிய விக்கெட்டான பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் விக்கெட்டையும் வீழ்த்தினார்.  ஆஃப் ஸ்டம்புக்கு உள்ளே வந்த பந்தை பாபர் ஆசம் எட்ஜ் செய்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.

  பாபர் ஆசம் டக் அவுட்.


  முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் 0/2 என்று ஆனது, இந்தச் சரிவிலிருந்து ஓரளவுக்கு மீண்டு 35.2 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான்.

  தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 22 ஓவர்களில் 142/1 என்று வெற்றி பெற்றது. டேவிட் மலான் 68 ரன்களையும் ஜாக் கிராலி 58 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சும் எடுபடவில்லை.

  ஜாக் கிராலியும், டேவிட் மலானும் சேர்த்த 120 ரன்கள் கார்டிப் மைதானத்தில் ஆகச்சிறந்த 2வது விக்கெட் கூட்டணியாகும் இதற்கு முன்பாக 2001-ல் மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங் கூட்டணி அமைத்து எடுத்த 92 ரன்கள்தான் இந்த மைதானத்தில் அதிகம்.

  இங்கிலாந்து அணியில் 5 அறிமுக வீரர்கள். ஜாக் கிராலி, தொடக்க வீரர் பில் சால்ட், ஆல்ரவுண்டர் லூயிஸ் கிரிகரி, வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ், விக்கெட் கீப்பர் ஜான் சிம்ப்சன்,
  பாகிஸ்தான் முதல் ஓவரிலேயே மஹ்மூதிடம் இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் ஆஸம் விக்கெட்டை இழந்தது, பிறகு ஸ்கோர் 17/3, 26/4 என்று ஆனது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பகர் ஜமான் (47)  ஒரு முனையில் பிரமாதமான ட்ரைவ்கள், சக்தி வாய்ந்த புல்ஷாட்கள் என்று ஆடிவந்தார். மறு முனையில் சொகைப் மக்சூத், கிரெய் ஓவர்டன் பந்தில் (2/23) எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸ் அபாரம். 53 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது மக்சூத் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். பகர் ஜமான் ஓடி வந்து பாதியிலேயே நிற்க திரும்பி வந்த மக்சூத் பார்க்க அங்கு பைல்கள் இல்லை.

  பகர் ஜமான், மேட் பார்கின்சன் (2/28) பந்தை பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 100 ரன்களை முக்கி முனகி பாகிஸ்தான் கடந்த நிலையில் மஹ்மூத் தன் 4வது விக்கெட்டைக் கைப்பற்றினார். பாஹிம் அஷ்ரப் வெளியேற்றப்பட்டார்.

  101/7 என்ற நிலையில் இந்த இங்கிலாந்து பந்து வீச்சை நின்று நிதானித்து ஆடினால் பயனில்லை என்று அடித்து ஆடினர், இதில் சதாப் கான் 43 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து இன்னிங்ஸில் தொடக்க அறிமுக வீரர் சால்ட்  7 ரன்களில் ஆவலாதியாக ஒரு ட்ரைவ் ஆட முயன்று ஷாஹின் அப்ரீடியிடம் மடிந்தார்.

  அதன் பிறகு விக்கெட் இல்லை. மலான் 68, ஜாக் கிராலி 58 என்று வெற்றி பெறச் செய்தனர். ஆட்ட நாயகனாக பவுலர் சாகிப் மஹ்மூத் தேர்வு செய்யப்பட்டார்.
  Published by:Muthukumar
  First published: