• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • England vs Pakistan| 332 ரன் இலக்கை அசால்ட்டாக விரட்டிய இங்கிலாந்து- பாகிஸ்தானுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி- பாபர் ஆசம் 158 ரன் வீண்

England vs Pakistan| 332 ரன் இலக்கை அசால்ட்டாக விரட்டிய இங்கிலாந்து- பாகிஸ்தானுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி- பாபர் ஆசம் 158 ரன் வீண்

இங்கிலாந்து வெற்றிக் கூட்டணி அமைத்த வின்ஸ், கிரிகரி.

இங்கிலாந்து வெற்றிக் கூட்டணி அமைத்த வின்ஸ், கிரிகரி.

பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற பகலிரவு ஆட்டமான 3வது ஒருநாள் போட்டியில் 332 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து அபரமாக விரட்டி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து.

  • Share this:
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசமின் ‘ஆஸம்’ இன்னிங்சான 158 ரன்களினால் 331/9 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 332 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ் 95 பந்துகளில் 102ரன்கள் விளாசி வெற்றியை எளிதாக்கினார்.

பாகிஸ்தானின் ஷாஹின் ஷா அஃப்ரீடி 10 ஓவர்களில் 78 ரன்கள் கொடுத்து சாத்து வாங்கினார். ஹசன் அலி, ராஃப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாத்துமுறை நடந்தது. ஆனால் ராஃப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 24வது ஓவரில் 165/5 என்று தடுமாறியது ஆனால் அதன் பிறகு ஜேம்ஸ் வின்ஸ், 102, லூயி கிரிகரியின் அதிரடி 77 ரன்களினால் 129 ரன்கள் 6வது விக்கெட்டுக்கு விளாசப்பட 43வது ஓவரில் 294 ரன்கள் என்று இங்கிலாந்து பாகிஸ்தான் ஸ்கோருக்கு அருகில் வந்தது. பிறகு 48வது ஓவரில் வெற்றி பெற்றது. கிரெய்க் ஓவர்டன் 18 நாட் அவுட், கார்ஸ் 12 நாட் அவுட் இங்கிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தன் அதிகபட்ச ஸ்கோரான 158 ரன்களை எடுத்தார், இதில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும். 139 பந்துகளையே சந்தித்தார் ஆசம்.

பாபர் ஆசமின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ் ரிஸ்வானுடன் சாதனைக் கூட்டணி:

பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் 2 போட்டிகளின் பவர் ப்ளே போலவே இந்தப் போட்டியிலும் தொடர் நாயகனான வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூது (3/60) முதல் விக்கெட்டை வீழ்த்தினார், பகர் ஜமான், 2வது ஸ்லிப்பில் ஜாக் கிராலியின் அபார கேட்சுக்கு பெவிலியன் திரும்பினார். இமாம் உல் ஹக் (56), மஹ்மூதிடம் முதல் ஓவரிலேயே பிளம்ப் எல்.பி.ஆனார், ஆனால் இங்கிலாந்து ரிவியூ செய்யவில்லை இதனால் தப்பினார் இமாம் உல் ஹக்.

158 ரன் குவித்த பாபர் ஆசம்.


பாபர் ஆஸம் நிதானமாகத் தொடங்கி ஆக்ரோஷத்துடன் முடித்தார், ஆசம் இன்னிங்ஸ் டாப் இன்னிங்ஸ்களில் ஒன்று எனக் கூற முடியும். இமாம் உல் ஹக்கும் இவரும் 92 ரன்கள் சேர்த்தனர். 56 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து லெக்ஸ்பின்னர் பார்க்கிங்சனின் ஷேன் வார்ன் பந்துக்கு பவுல்டு ஆனார் இமாம் உல் ஹக். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி திரும்பி மிடில் ஸ்டம்பில் மோதியது. பாபர் ஆசம் முதல் ரன்னை எடுக்க 15 பந்துகள் எடுத்துக் கொண்டார், ரிஸ்வான் இறங்க இவர் பாசிட்டிவ் ஆக ஆடினார்.

பிறகு பாபர் ஆஸம் அருமையாக ஆடினார், 72 பந்துகளில் அரைசதம் கண்ட ஆசம் 104 பந்துகளில் சதம் கண்டார், இவரது 14வது ஒருநாள் சதமாகும் இது. பிறகு அடித்து ஆடத் தொடங்கியதில் ஆஃப் சைடு, லெக் சைடு என்று திகைப்பூட்டும் ஷாட்களை ஆடினார் ஆசம்,

கடைசி 3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பாக். சரிவு:

ரிஸ்வான் (74), பாபர் ஆஸம் சேர்ந்து 179 ரன்கள் கூட்டணி அமைத்தனர், இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் ஆகச்சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும் இது. ரிஸ்வான் 58 பந்துகளில் 74 விளாசினார். இவர் 46வது ஓவரில் ஆட்டமிழந்தார். 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே பாகிஸ்தான் 300 ரன்களைக் கடந்தது. கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு இழந்தது. கார்ஸ் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் 331/9 என்று முடிந்தது.

ஷாஹின் அப்ரீடியின் முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள்:

இங்கிலாந்து இலக்கை விரட்டிய போது ஷாஹின் அப்ரீடியின் முதல் ஒவரிலேயே தொடக்க வீரர் சால்ட் 4 பவுண்டரிகளை விளாசி விரட்டலுக்குத் தயார் என்று காட்டினார். டேவிட் மலான் விக்கெட் கீப்பர் கேட்சுக்கு டக் அவுட் ஆனார், ஆனால் ரீப்ளேயில் நாட் அவுட் என்று தெரிந்தது, அவர் ரிவியூ செய்யாமல் பெவிலியன் திரும்ப்பி தவறிழைத்தார். சால்ட்டுடன் இணைந்த கிராலி இரண்டு அபார நேர் ட்ரைவ்களை அடித்தார். சால்ட் மேலும் 3 பவுண்டரிகளை விளாசி 22 பந்துகளில் 37 ரன்களில் வெளியேர கிராலி 34 பந்து 39 ரன்களில் வெளியேற இங்கிலாந்து 104/3 என்று ஆனது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாகிஸ்தான் பீல்டிங் படு சொதப்பல். பென் ஸ்டோக்ஸுக்கு (32) 2 முறை கேட்சை விட்டனர். ஸ்டோக்ஸ், ஜான் சிம்ப்சன் (3) வெளியேற இங்கிலாந்து 165/5 என்று 24வது ஓவரில் திணறியது.

அப்போதுதான் ஜேம்ஸ் வின்ஸ், லூயி கிரிகரி இணைந்தனர், இருவரும் நன்றாக ஓடி ரன்களை எடுத்ததோடு அருமையான டைமிங் பவுண்டரிகளை விளாசி 129 ரன்களை 19 ஓவர்களில் சேர்த்தனர். கிரிகரி தன் முதல் அரைசதத்தை 53 பந்துகளில் எடுத்தார். வின்ஸ் புல்ஷாட்டில் பவுண்டரி அடித்து 91 பந்துகளில் சதம் கண்டார் இது இவரது முதல் ஒருநாள் சதமாகும். கிரிகரி மிகப்பெரிய சிக்சர்கள் இரண்டை அடித்தார். இருவரும் ராஃபிடம் ஆட்டமிழக்க வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட டெய்ல் எண்டர்கள் வெற்றிக்கு இட்டுச்சென்றனர், இங்கிலாந்து 3-0 வெற்றி. ஆட்டநாயகனாக வின்ஸ் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக சாகிப் மஹ்மூது தேர்வு செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: