ஏன் சேஸ் செய்யவில்லை? : லார்ட்ஸ் ட்ராவுக்குப் பிறகு ஜோ ரூட் கூறும் காரணம்

ஜோ ரூட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஸ்பிரிட்டட் டிக்ளேர் செய்து இங்கிலாந்துக்கு 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தார், ஆனால் இங்கிலாந்து அணி இலக்கை விரட்ட முடிவெடுக்காமல் சொத்தையாக டிரா செய்தனர். 

 • Share this:
  நியூசிலாந்து அணி 169/6 என்று தன் 2வது இன்னிங்ஸை முடித்துக் கொள்ள இங்கிலாந்து அணிக்கு 75 ஓவர்களில் 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து சேஸ் செய்யும் என்று ஆவலுடன் பார்த்த ரசிகர்களுக்கு அறுவை கிரிக்கெட்டை பரிசாக அளித்தனர் ஜோ ரூட் &கோவினர். லார்ட்ஸ் டெஸ்ட் டிரா ஆனது. டாம் சிப்லி 161 பந்துகளில் அரைசதம் எடுத்து இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து தொடக்க வீரரின் ஆக மந்தமான அரைசதத்துக்குரியவரானார்.

  ஆனால் ஜோ ரூட்டின் முடிவையும் கருணையுடன் பார்க்க முடியும், பென் ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோ போன்றவர்கள் இல்லாமல் எப்படி சேஸ் செய்ய முடியும்? இளம் அணியினர் தலையில் மிகப்பெரிய பொறுப்பை சுமத்த முடியாது என்பதும் உண்மைதான்.

  Also Read: வில்லியம்சன் விடுத்த சவால்; சேஸ் செய்ய துணிவற்ற ஜோ ரூட்- லார்ட்ஸ் டெஸ்ட் டிரா

  இந்நிலையில் ஜோ ரூட் கூறியதாவது, “இந்தப் பிட்சில் சில நாட்கள் ஆடியதால் நிச்சயம் இலக்கை விரட்டுவது அவ்வளவு சாதகமல்ல என்று தோன்றியது. மேலும் மேட்ச் முழுக்கவுமே ரன் விகிதத்தை எடுத்துப் பார்த்தால் ஓவருக்கு 3 ரன்களுக்கும் மேல் எடுக்க முடியாத நிலைதான் இருந்தது, ஆனால் பிட்ச் நன்றாகத்தான் இருந்தது.

  முதலில் நல்ல அடித்தளத்தை அமைக்க விரும்பினோம், ஆரம்பக் கட்டங்களைக் கடந்த பிறகு யோசித்தோம், வெற்றி பெறுவதற்கான உண்மையான வாய்ப்பு இந்தப் பிட்சில் இல்லை என்று முடிவெடுத்தோம். எனவே கட்டுக்கோப்புடன் பேட்டிங்கை ஆடி சரி செய்யும் ஒரு வாய்ப்பாக இதனை மாற்றிக் கொண்டோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏனென்றால் முதல் இன்னிங்ஸில் கட்டுக்கோப்பில்லாமல் ஆடிய தருணங்கள் இருந்தன. எனவே பேட்டிங்கை வலுப்படுத்தி அடுத்த டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் இறங்க இதனை டிரா செய்ய முடிவெடுத்து ஆடினோம்.

  Also Read:  Ollie Robinson: 8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறு- அறிமுக இங்கிலாந்து பவுலர் ஆலி ராபின்சன் விளையாடத் தடை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி

  கடந்த 2 முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய போதும் முதல் போட்டியில் தோல்வியடைந்ததும் நினைவில் உள்ளது. இப்போது இந்த டெஸ்ட் டிரா ஆனதால் எட்ஜ்பாஸ்டனில் நாங்கள் தொடரை வெல்ல வாய்ப்பு கூடி வந்துள்ளது.

  பிட்சில் பந்துகள் சீராக எழும்பவில்லை, கொஞ்சம் ஏற்ற இறக்கமாகவே வந்தது, அதில் கேரக்டருடன் ஆடிய வீரர்களுக்கு என் பாராட்டுக்கள். சிப்லி இரண்டாவது இன்னிங்சில் நன்றாக ஆடியது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்றார் ஜோ ரூட்.
  Published by:Muthukumar
  First published: