ஏற்கெனவே காயத்தினால் நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன், தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திங்களன்று மாலைவாக்கில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. இங்கிலாந்தில் இத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசு உத்தரவு எதுவும் இல்லாததால் ராபின்சன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் படி விளையாட்டிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
எனவே இவர் நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வருவாரா என்பதும் இப்போதைக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆலி ராபின்சன் என்ற புதிய வேகப்பந்து வீச்சாளரின் வரவு இங்கிலாந்துக்கு புத்துணர்ச்சி அளித்தாலும் இங்கிலாந்து அணி ஆஷஸ் மற்றும் மே.இ.தீவுகளில் தொடரை இழந்தது ஜோ ரூட்டின் கேப்டன்சியைப் பறித்தது.
28 வயதான ஆலி ராபின்சன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், வந்தது முதலே நிறவெறி விவகாரம், ஃபிட்னெஸ் பிரச்சனை என்று இவரால் தொடர்ச்சியாக ஆட முடியவில்லை. முதுகு தசைப்பிடிப்பு, வலி காரணமாக அவர் தொடர் சிக்கலில் இருந்து வருகிறார்.
ஆஷஸ் தொடரில் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக பேட்டிங் நிலையிலிருந்து விலகி ஃபுல்டாஸில் அவுட் ஆனதிலிருந்து இவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்குக் குறைந்து வருகிறது.
இதனால்தான் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் ராபின்சன் இடம்பெறவில்லை. இங்கிலாந்து-நியூசிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 2ம் தேதி லார்ட்ஸில் தொடங்குகிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.