• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • England vs New Zealand: இங்கிலாந்து கதை 4ம் நாளில் முடிந்தது: 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

England vs New Zealand: இங்கிலாந்து கதை 4ம் நாளில் முடிந்தது: 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையுடன் நியூசிலாந்து அணி.

இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையுடன் நியூசிலாந்து அணி.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது, கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்றது.

  • Share this:
    கேன் வில்லியம்சன் உட்பட 6 மாற்றங்களைக் கொண்டு வந்த நியூசிலாந்து கடந்த 7 டெஸ்ட் போட்டிகளாக இங்கிலாந்திடம் தோற்கக் கூடாது என்று ஆடிவருகிறது, 1999-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து.

    இங்கிலாந்து 303 மற்றும் 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக நியூசிலாந்து 388 மற்றும் 41/2. என்று வெற்றி பெற்றது. 7 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முதல் முறையாக இழக்கிறது.

    122/9 என்று தொடங்கிய இங்கிலாந்து இன்று வந்தவுடனேயே முதல் பந்திலேயே போல்ட் பந்து கொஞ்சம் உயரே எழும்ப 15 ரன்னில் எட்ஜ் ஆகி பிளண்டெலிடம் கேட்ச் ஆகி வெளியேற 122 ரன்களுக்கு இங்கிலாந்து 2வது இன்னிங்சில் ஃபணால் ஆனது. நியூசிலாந்தில் மேட் ஹென்றி, நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, போல்ட், ஸ்பின்னர் படேல் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

    நியூசிலாந்து வெற்றிக்கு 38 ரன்கள் தேவை. என்ற நிலையில் நியூசிலாந்து அணி டெவன் கான்வே (3) விக்கெட்டை பிராடின் அருமையான அவுட்ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பர் பிரேசி கேட்சுக்கு இழந்தது.

    வில் யங் 31 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆலி ஸ்டோன் பந்தை ட்ரைவ் ஆட முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

    டாம் லேதம் 23 ரன்கள் எடுத்து வின்னிங் ஷாட்டை பவுண்டரியாக அடித்து வெற்றி பெறச் செய்தார் அவர் 23 நாட் அவுட்.

    ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வாக, தொடர் நாயகனாக அறிமுக வீரர் டெவன் கான்வேயும் இங்கிலாந்தின் ரோரி பர்ன்சும் தேர்வு செய்யப்பட்டனர், டெவன் கான்வேயின் சராசரி இந்தத் தொடரில் 76.80.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடரை தோற்ற ஏமாற்றத்தில் ஜோ ரூட், ‘ஒரு செஷன் பந்து வீச்சில் சோடை போகலாம் ஆனால் பேட்டிங்கில் சோடை போனால் அவ்வளவுதான் என்பதைப் புரிந்துக் கொண்டோம்” என்றார்.

    கிட்டத்தட்ட 3 நாட்களில் இங்கிலாந்து தோற்றுள்ளது, ஜோ ரூட்டின் பேட்டிங் பார்மே கேள்விக்குறியாக உள்ளது. 6 மாற்றங்களைச் செய்தே இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து.

    இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வென்றது மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவுக்கு ஒரு மெசேஜ் கொடுத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: