டெபுவிலேயே டபுள் செஞ்சுரி: அசைக்க முடியா டெவன் கான்வே; இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்கும் ரூட், பர்ன்ஸ்

இரட்டைச்சத நாயகன் டெவன் கான்வே.

நியூசிலாந்தின் புதிய நட்சத்திர டெவன் கான்வே தன் அறிமுக டெஸ்ட்டில் அதுவும் மதிப்பு மிக்க லார்ட்ஸில் 200 ரன்களை குவித்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார், ஆனால் நியூசிலாந்து அணி 288/3 என்ற நிலையிலிருந்து 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  • Share this:
நியூசிலாந்தின் புதிய நட்சத்திர டெவன் கான்வே தன் அறிமுக டெஸ்ட்டில் அதுவும் மதிப்பு மிக்க லார்ட்ஸில் 200 ரன்களை குவித்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார், ஆனால் நியூசிலாந்து அணி 288/3 என்ற நிலையிலிருந்து 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பிறகு இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சை ஆடிய போது 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறிய போது கேப்டன் ஜோ ரூட் (42 நாட் அவுட்), ரோரி பர்ன்ஸ் (59 நாட் அவுட்) ஆகியோர் கூட்டணி அமைக்க 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 111/2 என்று உள்ளது, பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 68 ரன்கள்தேவை.

இங்கிலாந்துக்கு அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்,

டெவன் கான்வே 347 பந்துகளில் 22 பவுண்டரி 1 சிக்சருடன் 200 ரன்கள் எடுத்து கடைசி வீரராக ரன் அவுட் ஆனார், இவரை இப்படி வீழ்த்தினால்தான் உண்டு போலும். ஏனெனில் அவரை அசைக்க முடியவில்லை, அதுவும் இரட்டைச் சதம் அடித்த போது 194-லிருந்து மார்க் உட் பவுன்சரை சிக்சருக்கு அனுப்பி 200 ரன்களை எட்டினார்.

அறிமுகப் போட்டியிலேயே இரட்டைச் சதம் எடுக்கும் 7வது வீரர் ஆனார் டெவன் கான்வே. அதே போல் நியூசிலாந்து வீரர் மேத்யூ சின்க்ளைர் 1990-ம் ஆண்டு தன் டெபு டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த பிறகு தற்போது 2வது நியூசிலாந்து வீரராக டெபு டபுள் செஞ்சுரி அடித்துள்ளார் டெவன் கான்வே.

நியூசிலாந்து அணி 400 ரன்களுக்கும் மேல் அடித்திருக்க வேண்டும், ஆனால் ஆலி ராபின்சன் (4 / 75), மார்க் உட் (3-81) அபாரமாக வீச 288/3 என்ற நிலையிலிருந்து நியூசிலாந்து அணி 378 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது.

நியூசிலாந்து வீரர்கள் ஹென்றி நிகோல்ஸ் (61), டெவன் கான்வே 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பிறகு நிகோல்ஸ் வெளியேற இங்கிலாந்து 8.3 ஓவர்களில் 6 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மார்க் உட் வீசிய அபாரமான பவுன்சர் சடுதியில் எகிற நிகோல்ஸின் ஹூக் ஷாட் நேராக ராபின்சனின் கையில் போய் உட்கார்ந்தது.

கடைசியில் நீல் வாக்னர் 21 பந்துகளில் 25 நாட் அவுட் என்று சாத்தி எடுக்க கான்வேயுடன் சேர்ந்து ஸ்கோரை 378 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியூசிலாந்து பந்து வீச்சில் 7 அடி உயர கைல் ஜேமிசன் பிரமாதமாக இன்ஸ்விங்கரை வீச டாம் சிப்லி டக் அவுட் ஆனார். ஜாக் கிராலி, சவுதியினால் ஒர்க் அவுட் செய்யப்பட்டு நன்றாக வெளியே வீசப்பட்ட பந்தை ட்ரைவ் ஆடப்போய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பிறகு கேப்டன் ஜோ ரூட், ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழக்காமல் 93 ரன்களைச் சேர்த்தனர்.

ஆனாலும் இந்த நாள் டெபுவில் இரட்டைச் சதம் சாதித்த டெவன் கான்வேவுக்குச் சொந்தமானது.
Published by:Muthukumar
First published: