லீட்சில் நடைபெறும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் வெற்றி இலக்கான 296 ரன்களை நோக்கி முன்னேறியபடி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் 81 ரன்களுடனும் 'எவர் கிரீன்' ஜோ ரூட் 55 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர், 3-0 கிளீன் ஸ்வீப் நோக்கி இங்கிலாந்து பயணிக்கிறது.
முன்னதாக இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச் 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட்டில் தன் வாழ்நாளில் முதல் முறையாக எடுக்க நியூசிலாந்து 326 ரன்கள் எடுத்து 2வது இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. 2 இன்னிங்ஸ்களிலும் 320 ரன்களுக்கும் மேல் எடுத்தும் நியூசிலாந்து தோற்கிறது என்றால் காரணம், புதிய இங்கிலாந்தின் புதிய ஆக்ரோஷ அணுகுமுறையே காரணம்.
ஆனால் ஜாக் லீச்சிடம் போய் ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை கொடுத்த நியூசிலாந்தை மன்னிக்க முடியாது. ஜெஃப் பாய்காட் ஊரில் இருக்கும் ஸ்பின்னர்களையெல்லாம் லாலிபாப் பவுலர் என்பார், உண்மையில் ஜாக் லீச் ஒரு லாலிபாப் பவுலர் என்பது பல முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று, ஆனால் அவரிடம் 10 விக்கெட்டுகளைக் கொடுக்கும் நியூசிலாந்து எப்படி வெற்றி பெற முடியும்? முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்த ஜாக் லீச், 2வது இன்னிங்சில் 66/5 என்று ஒரு டெஸ்ட்டில் முதல் முறையாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 296 ரன்கள், ஆனால் 183/2 என்று உள்ள இங்கிலாந்து ஆலி போப் 81 நாட் அவுட், ரூட் 55 நாட் அவுட்டுடன் 5ம் நாளான இன்று 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கும் அநேகமாக லஞ்சுக்குள் ஆட்டம் முடிந்து விடும்.
நியூசிலாந்து 168/5 என்று 4ம் நாளான நேற்று தொடங்கி, டேரில் மிட்செல் (56), டாம் பிளெண்டல் (88) 113 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தத் தொடரில் தொடர்ந்து இங்கிலாந்தின் தலைவலியாக இருந்து வந்த நிலையில் மிட்செல் மேலும் ஒரு அரைசதம் எடுத்து பாட்ஸ் பந்தில் எல்.பி.ஆனார். பிரேஸ்வெல், டிம் சவுதீ, நீல் வாக்னர், போல்ட் ஆகியோரை ஜாக் லீச் சடுதியில் வெளியேற்றி கடைசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பிளெண்டல் 88 நாட் அவுட், நியூசிலாந்து 326 ரன்களுக்கு ஆல் அவுட்.
296 ரன்கள் வெற்றி இலக்குடன் தொடங்கிய இங்கிலாந்து அணி அலெக்ஸ் லீஸ் (9) விக்கெட்டை ரன் அவுட்டில் இழந்தது, ஆனால் ஜாக் கிராலி 6 பவுண்டரிகள் விளாசி 33 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இவர் பிரேஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன் பிறகு 12 ஓவர்களில் 51/2 என்று இருந்த இங்கிலாந்து ஜோ ரூட், ஆலி பாப் அதிரடியில் அடுத்த 27 ஓவர்களில்
132 ரன்களை விளாசியது. இங்கிலாந்து ரன் ரேட் 4.69. ஆட்ட முடிவில் 183/2 என்று உள்ளது, எளிதான 3-0 வெற்றி உண்டு. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் நியூசிலாந்து வெற்றி பெற முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England, Joe Root, Kane Williamson, New Zealand