Home /News /sports /

டெஸ்ட்டில் 16 ஓவர்களில் 160 ரன்கள்- பவுண்டரியிலேயே 1000 ரன்கள்- சாதனைப் புத்தகத்தை மாற்றி எழுத வைத்த பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ்

டெஸ்ட்டில் 16 ஓவர்களில் 160 ரன்கள்- பவுண்டரியிலேயே 1000 ரன்கள்- சாதனைப் புத்தகத்தை மாற்றி எழுத வைத்த பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ்

சாதனைக் கூட்டணி பேர்ஸ்டோ-ஸ்டோக்ஸ்

சாதனைக் கூட்டணி பேர்ஸ்டோ-ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 299 ரன்கள் இலக்கை 50 ஓவர்களில் இங்கிலாந்து எட்டியது இதில் சிலபல சாதனைகளை முறியடித்துள்ளது இங்கிலாந்து. ஒரு டெஸ்ட் மேட்சில் அதிக பவுண்டரிகள் சாதனையாக 249 பவுண்டரிகள், இதில் 24 சிக்சர்களும் அடங்கும்.

மேலும் படிக்கவும் ...
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 299 ரன்கள் இலக்கை 50 ஓவர்களில் இங்கிலாந்து எட்டியது இதில் சிலபல சாதனைகளை முறியடித்துள்ளது இங்கிலாந்து. ஒரு டெஸ்ட் மேட்சில் அதிக பவுண்டரிகள் சாதனையாக 249 பவுண்டரிகள், இதில் 24 சிக்சர்களும் அடங்கும்.

    இங்கிலாந்து 93/4லிருந்து தேநீர் இடைவேளையின் போது 139/4 என்று இருந்தது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஒரு 9 ஓவர் நியூசிலாந்து பவுலர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது, ஆனால் பீல்டர்களுக்குத் தெரியும். 9 ஓவர்களில் 102 ரன்கள். 20 ஓவர்களில் 180 ரன்கள் பார்ட்னர்ஷிப், டி20 ஆடினர்.

    77 பந்துகளில் பேர்ஸ்டோ சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்சின் 2வது அதிவேக சத சாதனையாகும் இது. இதற்கு முன்பு கில்பர்ட் ஜெஸாப் என்பவர் 1902ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 76 பந்துகளில் சதம் கண்டதுதான் 4வது இன்னிங்ஸ் அதிவேக சத சாதனையாகும்

    8.87 ரன் ரேட்- ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் பார்ட்னர்ஷிப் ரன் ரேட் இது. டெஸ்ட்டில் இது 3வது அதிவேக சதக்கூட்டணியாகும். அதே போல் 20 ஒவர்களுக்கு மேல் ஆடிய பார்ட்னர்ஷிப்புகளில் இதுவே அதிவேக ரன் எடுப்பாகும்.

    10.00- இங்கிலாந்தின் கடைசி செஷன் ரன் ரேட் இதுவாகும். 38 ஓவர்களில் 160 தேவை, ஆனால் 16 ஓவர்களில் கதை முடிந்தத். ஒரே செஷனில் இந்த ரன் ரேட் என்பது ஒரு சாதனை. முன்பு நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016-ல் ஒரே செஷனில் 8.29 என்ற ரன் விகிதத்தை வைத்திருந்தது. நியூசிலாந்து 24 ஓவர்களில் 199 ரன்களை ஒரே செஷனில் அடித்து 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்தது.

    5.98- இங்கிலாந்தின் 4வது இன்னிங்சின் ஒட்டுமொத்த ரன் ரேட். டெஸ்ட் இன்னிங்ஸில் 4வது சிறந்த ரன் விகிதமாகும் இது. இந்த விதத்தில் தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2005 கேப்டவுன் டெஸ்ட்டில் 6.80 ரன் ரேட்டுடன் முதலிடம் வகிக்கிறது.

    299- ட்ரெண்ட் பிரிட்ஜில் இதுதான் அதிகபட்ச டெஸ்ட் 4வது இன்னிங்ஸ் வெற்றிகர விரட்டலாகும். இதே நியூசிலாந்துக்கு எதிராக 284 ரன்களை இங்கிலாந்து 2004-ல் சேஸ் செய்தது.

    பவுண்டரியிலேயே 1000 ரன்களுக்கும் மேல் எடுக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி இதுதான். 2004-ல் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 705 ரன்களக் குவித்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் 976 ரன்களை பவுண்டரிகளிலேயே அடித்தது, இப்போது இது உடைபட்டது.

    இந்தப் போட்டியில்தான் அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது, 249 பவுண்டரிகள் 24 சிக்சர்கள் உட்பட.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ben stokes, England, New Zealand

    அடுத்த செய்தி