Home /News /sports /

ENG vs NZ 2nd test- 92 பந்துகளில் 136 ரன்கள் விளாசல் - பேர்ஸ்டோ ஆவேசம்: இங்கிலாந்து ரெக்கார்ட் சேஸிங்கில் பிரமிப்பூட்டும் வெற்றி

ENG vs NZ 2nd test- 92 பந்துகளில் 136 ரன்கள் விளாசல் - பேர்ஸ்டோ ஆவேசம்: இங்கிலாந்து ரெக்கார்ட் சேஸிங்கில் பிரமிப்பூட்டும் வெற்றி

ஜானி பேர்ஸ்டோ காட்டடி, 92 பந்தில் 136

ஜானி பேர்ஸ்டோ காட்டடி, 92 பந்தில் 136

92 பந்துகளில் 136 ரன்கள் விளாசல் - பேர்ஸ்டோ ஆவேசம்: இங்கிலாந்து ரெக்கர்ட் சேஸிங்கில் பிரமிப்பூட்டும் வெற்றி
நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு நிர்ணையிக்கப்பட்டது, 70 ஓவர்கள் இருந்தன, ஆனால் ஜானி பேர்ஸ்டோ 77 பந்துகளில் சதம் கண்டதோடு 92 பந்துகளில் 136 ரன்களை விளாசி அதில் 14 பவுண்டரிகள் 7 சிக்சர்களை பறக்க விட 50 ஓவர்களில் இங்கிலாந்து 299/5 என்று அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியது இங்கிலாந்து.

அதுவும் தேநீர் இடைவேளக்குப் பிறகு 68 பந்துகளில் 133 ரன்கள் என்றால் என்னா அடி என்பதை ஊகித்துக் கொள்ளலாம், 93/4 என்ற நிலையிலிருந்து அடுத்த 20 ஒவர்களில் 180 ரன்களை விளாசினர் பேர்ஸ்டோவும் பென் ஸ்டோக்ஸும். டெஸ்ட்டா டி20யா என்ற சந்தேகம் எழுந்தது. டிம் சவுதி 11 ஓவர் 67, ட்ரெண்ட் போல்ட் 16 ஓவர் 94 ரன்கள் 3 விக்கெட், ஹென்றி 15 ஓவர் 67, ஸ்பின்னர் மைக்கேல் பிரேஸ்வெல் 8 ஓவர் 60 ரன்கள் என்று மைதானம் நெடுக நியூசிலாந்து வீரர்கள் ஓடிய வண்ணம் இருந்தனர், மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை ரோடில் ஓடியிருந்தால் நியூசிலாந்துக்கே கூட சென்றிருக்கலாம்.

நியூசிலாந்து கோச் பிரெண்டன் மெக்கல்லம், நியூசிலாந்தைச் சேர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் புதிய அத்தியாயத்தை நோக்கி இங்கிலாந்து சென்று கொண்டிருக்கிறது, ஏனெனில் நேற்று ஜானி பேர்ஸ்டோ ஆடியதைப் பார்த்தால் அப்படியே பிரெண்டன் மெக்கல்லம் ஒருமுறை ஆஸ்திரேலியாவை பின்னி எடுத்து 54 பந்துகளில் சதம் கண்டாரே அதைப்பார்ப்பது போலவே இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1902-ல் கில்பர்ட் ஜெசாப் விளாசிய 76 பந்து சத சாதனையை ஓவர் டேக் செய்வார் பேர்ஸ்டோ என்று எதிர்பார்க்கப்பட்டது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 9 ஓவர்களில் 100க்கும் மேல் ரன்கள் குவிக்கப்பட்டன, திடீரென உடம்புக்குள் ஆவி புகுந்தது போல் ஆடினார் ஜானி பேர்ஸ்டோ. பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் 75 நாட் அவுட், இருவரும் சேர்ந்து தேநீர் இடைவேளைக்குப் பிரகு 68 பந்துகளில் 133 ரன்களை விளாசினர். நியூசிலாந்து மிக மோசமாக ஷார்ட் பிட்ச் பந்து உத்தியை கடைப்பிடிக்க பவுண்டரிகள் பறந்தன.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு பேர்ஸ்டோ ஒரு கட்டத்தில் 48 பந்தில் 43 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்த 38 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்குத் தேவை 160 ரன்கள். ஆனால் அடித்த அடியில் 50 ஒவர்களில் மேட்ச் முடிந்து விட்டது.

முன்னதாக நியூசிலாந்து தன் 2வது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிராட் 3 விக்கெட்டுகளை எடுக்க பாட்ஸ், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டேரில் மிட்செல் 62 நாட் அவுட் என்று அசத்தினார்.

வெற்றி பெற 72 ஓவர்களில் கிட்டத்தட்ட 300 ரன்கள் என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி  ஜாக் கிராலி விக்கெட்டை டக்கில் இழந்தது. ஆலி பாப், ஜோ ரூட்டும் ஏமாற்றமளிக்க 56/3 என்று ஆனது, பிறகு தொடக்க வீரர் லீஸ் 44 ரன்களில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து 93/4 என்று சரிவு கண்டது. ஆனால் அடுத்த 20 ஓவர்களில் 180 ரன்களை பேர்ஸ்டோவும், பென் ஸ்டோக்ஸும் விளாசுவார்கள் என்று கனவில் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

பேர்ஸ்டோ மேட் ஹென்றியை அடுத்தடுத்த பவுண்டரி அடித்து 51 பந்தில் அரைசதம் கண்டார். பிறகு பொழிந்த சிக்சர் மழையில் அடுத்த 26 பந்தில் சதம் கண்டார். ஹென்றி, ட்ரெண்ட் போல்ட், சவுத்திக்கு செம அடி. கடைசியில் 136 ரன்களில் நியூசிலாந்தை போதும் என்று பரிதாபப்பட்டு விட்டுச் சென்றார்.

பென் ஸ்டோக்ஸ் ஒருமுனையில் இறுக்கப்பிடித்தார், ஆனால் அவரும் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 75 நாட் அவுட். போல்ட் பந்தை கவர் பவுண்டரிக்கு அனுப்பிய போது இங்கிலாந்து வென்றது. ஜனவரி 2021-ல் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்ற பிறகு இப்போது முதல் டெஸ்ட் தொடர் வெற்றி. ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ.
Published by:Muthukumar
First published:

Tags: Ben stokes, England test, New Zealand

அடுத்த செய்தி