விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் என்ற இப்போதைய நால்வரில் பாபர் அசாம் இணைந்தாலும் ஜோ ரூட் மிகப்பிரமாதமாக ஆடி நியூசிலாந்துக்கு எதிராக தன் 27வது டெஸ்ட் சதத்தை எடுத்து 176 ரன்கள் என்ற பெரிய சதமாக மாற்றியுள்ளார், விஷயம் அதுவல்ல, அவர் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை ரிவர்ஸ் ஷாட்டில் சிக்ஸ் விளாசியதுதான் பேசுபொருளாகியுள்ளது.
2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 539 ரன்கள் குவித்தாலும் நியூசிலாந்துக்கு ஒரு 14 ரன்கள் முன்னிலையைக் கொடுத்தது, நியூசிலாந்து 4ம் நாள் ஆட்ட முடிவில் 224/7 என்று உள்ளது, இதன் மூலம் 238ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இன்று 5ம் நாள் ஆட்டத்தில் விரைவில் நியூசிலாந்தை வீழ்த்தி இருக்கும் ஓவர்களுக்குள் இங்கிலாந்து இலக்கை விரட்டுமா என்பதுதான் சுவாரஸியம்.
நடந்துகொண்டிருக்கும் டெஸ்டின் 4வது நாளில், ரூட் தனது முழு வீச்சையும் காட்டினார் மற்றும் டிம் சவுதியின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்கூப் சிக்ஸரையும் பதிவு செய்தார், இது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
A quiet start to the morning in Nottingham...
Scorecard & Videos: https://t.co/GJPwJC59J7
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/Fjz96fl2SZ
— England Cricket (@englandcricket) June 13, 2022
117வது ஓவரின் முதல் பந்தில், சவுதியின் பந்துவீச்சில் ரூட் ரிவர்ஸ் ஸ்கூப்பை ஆட அது சிக்சருக்கு சென்றது.
டிம் சவுதீ பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார், ரூட் கிட்டத்தட்ட இடது கையில் அடித்தது போல்தான்... ஆனால் சரியான டைமிங்.
2021 முதல் ஜோ ரூட் 10 சதங்களை எடுத்துள்ளார், மும்மூர்த்திகளான கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஒரு சதம் கூட எடுக்கவில்லை. ரூட் இப்போது கோலி மற்றும் ஸ்மித்துடன் 27 சதங்களில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England test, Joe Root, New Zealand