முகப்பு /செய்தி /விளையாட்டு / சுனில் கவாஸ்கர் சாதனையை உடைத்த ஜோ ரூட்

சுனில் கவாஸ்கர் சாதனையை உடைத்த ஜோ ரூட்

 ஜோ ரூட்

ஜோ ரூட்

இந்தியாவின் லெஜண்ட் பேட்டர் சுனில் கவாஸ்கரின் அதிகபட்ச டெஸ்ட் ரன்கள் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்து, கடந்து சென்றார். 10,191 ரன்களை எடுத்து ஜோ ரூட் கவாஸ்கரைப் பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவின் லெஜண்ட் பேட்டர் சுனில் கவாஸ்கரின் அதிகபட்ச டெஸ்ட் ரன்கள் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்து, கடந்து சென்றார். 10,191 ரன்களை எடுத்து ஜோ ரூட் கவாஸ்கரைப் பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நாட்டிங்காமில் 176 ரன்களை எடுத்த ஜோ ரூட், சுனில் கவாஸ்கரின் 10,122 ரன்களைக் கடந்து சென்றார். இதனால் 12ம் இடம் இருந்த கவாஸ்கர் 13ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். நியூசிலாந்து அணி 5ம் நாளான இன்று தோல்வியைத் தவிர்க்கும் பொருட்டு 243/7 என்று ஆடி வருகிறது.

இங்கிலாந்தை போட்டு படுத்தி எடுக்கும் டேரில் மிட்செல் 40 ரன்களுடனும் மேட் ஹென்றி 17 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், நியூசிலாந்து 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

சச்சின் டெண்டுல்கர் 15,921

ரிக்கி பாண்டிங் 13,378

ஜாக் காலீஸ் 13,289

இதெல்லாம் சரி சுனில் கவாஸ்கர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட பலதலைமுறை பயங்கர வேகப்பந்து வீச்சாளர்களை, ஸ்விங் பவுலர்களை அதுவும் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் எதிர்கொண்டிருப்பாரா ஜோ ரூட். சாதனை, ரன்கள் எல்லாம் ஒரு எண்ணிக்கைதான், கிளாஸ் என்பதில் தரம்பிரித்தால் கவாஸ்கர் எங்கோ இருக்கிறார்.

வெஸ்லி ஹால், கிரிபித், கில்கிறிஸ்ட், ராபர்ட்ஸ், கார்னர், மார்ஷல், ஹோல்டிங் வெய்ன் டேனியல், கீத் பாய்ஸ், பெர்னர்ட் ஜூலியன், வான்பன் ஹோல்டர், கிளார்க், பிலிப் வரை என்று ஆரம்பித்து இந்தப் பக்கம் சர்பராஸ், இம்ரான் கான், வாசிம் அக்ரம் என்றும் இங்கிலாந்தில் ஜான் ஸ்னோ, பாப் வில்லிஸ், கிறிஸ் ஒல்டு, இயன் போத்தம் என்றும் ஆஸ்திரேலியாவில் தாம்சன், லில்லி, லென் பாஸ்கோ போன்ற பவுலர்களை எதிர்கொண்டு, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி என்று ஆடி சுனில் கவாஸ்கர் வேகப்பந்து வீச்சில் கொடி நாட்டியவர். ஸ்பின்னிலும் மேற்கிந்திய தீவுகளின் லான்ஸ் கிப்ஸ், இங்கிலாந்தின் டெரிக் அண்டர்வுட், பாகிஸ்தானின் இக்பால் காசிம், அப்துல் காதிர், தவ்சீப் அகமட், என்று சிறந்த பவுலர்களை கவாஸ்கர் ஆடியுள்ளார்.

First published:

Tags: Joe Root