ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

England vs New Zealand 2021| நாளை இங்கிலாந்து-நியூசிலாந்து முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம் உடையுமா?- 10 சுவாரஸ்யப் புள்ளி விவரங்கள்

England vs New Zealand 2021| நாளை இங்கிலாந்து-நியூசிலாந்து முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம் உடையுமா?- 10 சுவாரஸ்யப் புள்ளி விவரங்கள்

கேன் வில்லியம்சன், ஜோ ரூட்.

கேன் வில்லியம்சன், ஜோ ரூட்.

நாளை, ஜூன் 2ம் தேதி லார்ட்ஸில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் களம் காண்கின்றன.

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  சர் ரிச்சர்ட் ஹாட்லியின் 1986ம் ஆண்டு பிரமாத பந்து வீச்சு முதல் அதிவேக உலக சாதனை இரட்டைச் சதம் அடித்த நேதன் ஆஸ்டில் வரை சில சுவாரசியமான புள்ளி விவரங்கள் இருஅணிகளுக்கும் உள்ளன.

  இங்கிலாந்து-நியூசிலாந்து இடையே மறக்க முடியாத சில டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதிலிருந்து சில புள்ளி விவரங்கள் இதோ:

  23:5 - இது இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் வெற்றி விகிதமாகும், அதாவது மொத்தம் 37 டெஸ்ட் தொடர்களில் இருநாடுகளும் விளையாடியுள்ளன, இதில் 23 தொடர்களை இங்கிலாந்து கைப்பற்ற 5 தொடர்களில் மட்டுமே நியூசிலாந்து வென்றுள்ளது. 9 தொடர்கள் ட்ரா ஆகியுள்ளது. இதுதான் இங்கிலாந்தின் ஆதிக்கம். குறிப்பாக 1930 முதல் 1984 வரை நியூசிலாந்திடம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 54 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து.

  இந்த இங்கிலாந்து ஆதிக்கத்தைப் பார்க்கும் போது நியூசிலாந்து அணி 2018 மற்றும் 2019-20 டெஸ்ட் தொடர்களை வென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த முறை 2015-ல் இங்கிலாந்து வந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 1-1 என்று ட்ரா செய்தது.

  48:11- இங்கிலாந்து , நியூசிலாந்து வெற்றி விகிதம். 48 டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றி பெற நியூசிலாந்து 11 டெஸ்ட்களில் மட்டுமே வென்றுள்ளது.

  112.77- நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தின் கிரேட் வாலி ஹாமண்டின் சராசரி, மிகப்பெரிய சராசரி, உலக சாதனை. வா1015 ரலி ஹாமண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக 1015 ரன்களை விளாசியுள்ளார். இதில் 1933ம் ஆண்டு ஆக்லாந்தில் 336 பெரிய இன்னிங்ஸ் ஆகும். இரண்டே டெஸ்ட்களில் 533 ரன்களைக் குவித்தார் வாலி ஹாமண்ட்.

  55.57- இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து பேட்ஸ்மெனின் அதிகபட்ச சராசரி. இது வேறு யாருமல்ல நியூசிலாந்தின் தற்போதைய விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங் தான்.

  92 பந்துகளில் சதம்: பென் ஸ்டோக்ஸ் 2015 லார்ட்ஸ் டெஸ்ட்டில் 92பந்துகளில் 101 ரன்களை விளாசினார்.

  39 பந்துகள்: அதிவேக இரட்டை சதம்: நேதன் ஆஸ்டில் 152 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசினார், இங்கிலாந்துக்கு எதிராக. இதில் 100-லிருந்து 200க்குச் செல்ல 39 பந்துகளைத்தான் எடுத்துக் கொண்டார் நேதன் ஆஸ்டில். இந்த இன்னிங்ஸ் உலக மகா இன்னிங்ஸ் ஆகும், 550 ரன்கள் வெற்றி இலக்கை 2002ல் கிறைஸ்ட் சர்ச்சில் விரட்டையது நியூசிலாந்து. 119/3 என்ற நிலையில் இறங்கிய நேதன் ஆஸ்டில், 168 பந்துகளில் 222 ரன்களை விளாசி அசத்தினார். 28 பவுண்டரிகள் 11 சிக்சர்கள். பவுலர்கள் ஏப்ப சோப்பையெல்லாம் இல்லை. ஆண்ட்ரூ காடிக், பிளிண்டாஃப், மேத்யூ ஹோகார்ட், ஆஷ்லி ஜைல்ஸ் ஆகியோர் இருந்தனர் இங்கிலாந்தில். இந்த இன்னிங்சில் ஆஸ்டிலின் ஸ்ட்ரைக் ரேட் 132.14 டெஸ்ட் வரலாற்றில் இரட்டைச் சதங்களில் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டாக இன்று வரை திகழ்கிறது.

  19 விக்கெட்டுகள்: நியூசிலாந்தின் மகா மேதை ஸ்விங் பவுலர் ரிச்சர்ட் ஹாட்லி 1986 தொடர் வெற்றியில் எடுத்த விக்கெட்டுகள். சராசரி 20.52, அதாவது 20 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற சராசரியில் வீழ்த்தியுள்ளார் ஹாட்லி.

  66: இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், நடப்பு பவுலர்களில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்.

  2 ஹாட்ரிக்குகள்: இரண்டு ஹாட்ரிக்குகளுமே இங்கிலாந்து வீரர்கள் எடுத்தது. 1930-ல் மாரிஸ் அலோம், 2008-ல் இடது கை வீச்சாளர் சைட்பாட்டம்.

  97- இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சர் ரிச்சர்ட் ஹாட்லி முதலிடம் வகிக்கிறார்.

  கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18தமிழ்-ஐ ஃபாலோ செய்து விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: England test, Test cricket