பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புது இங்கிலாந்து, புது கோச், பேட்டிங்கில் அதே ஜோ ரூட் என்ற சேர்க்கையில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை லார்ட்ஸ் டெஸ்ட்டில் வீழ்த்தியதில் ரூட் சதமெடுத்து வெற்றிக்கு இட்டு சென்றார், வெற்றி பெற்றவுடன் பெவிலியன் நோக்கி நடந்த ஜோ ரூட் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்த படியே மற்ற வீரர்களுடன் கைக்குலுக்கலுக்குத் தயாரானார்.
ஜோ ரூட் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய 2வது இங்கிலாந்து வீரர், உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 14வது பேட்டர், 115 நாட் அவுட் என்பது அவரது 26வது சதம் என்பதோடு ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுத் தந்தது.
ஜோ ரூட் தலைமையில் பென் ஸ்டோக்ஸ் தன் ஆல்ரவுண்ட் திறமையில் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார், இப்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியை ஜோ ரூட் தன் சதம் மூலம் வென்று கொடுத்துள்ளார். பிட்ச் ஸ்லோவாகி விட்டது, என்பது ஒருபுறம் என்றாலும் 277 ரன்கள் 4வது இன்னிங்சில் பெரிய பிரஷர்தான்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் ஜோ ரூட் பேசிய போது, “உண்மையில் ஃபண்டாஸ்டிக். நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட்டில் வென்றதுதான் அனைத்தையும் விட முக்கியமானது. இந்த வெற்றி மூலம் முன்னேற்றத்தை நோக்கி செல்வோம். என் தலைமையில் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றுத் தந்துள்ளார், இப்போது அவர் தலைமையில் நான் பங்களிப்பு செய்து வெற்றி பெறச் செய்யும் முறை வந்துள்ளது.
நான் பேட்டிங்கை நேசிப்பவன், எவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமோ எடுத்து இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்வது தான் நோக்கம். இதற்கான சக்தியும் வேட்கையும் உள்ளவரையில் நான் இதைச் செய்து கொண்டிருப்பேன். ஸ்டோக்சை விட சிறந்த நபர் கேப்டன்சிக்கு கிடையாது என்பது என் கருத்து.
நிறைய பேர் நான் ரன்களை எடுப்பது பற்றி பேசுகின்றனர், ஆனல் அவையெல்லாம் அணியின் தோல்வியில் முடிந்தால் என்ன பயன்? தோல்வி என்பது ஒரு பெரிய காயம், அதனால் என் சொந்த ரன்களையும் நான் மகிழ்வுடன் கொண்டாட முடியாது.
ஸ்டோக்ஸ் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ அதைச் செய்வேன். அவருக்காக தோள் கொடுப்பேன், எனக்கு அவர் தோள் கொடுத்ததைப் போல.
இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England test, Joe Root